இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், மற்றும் சிப்லி ஆகியோரின் அதிரடி சதத்தினால், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 469 ரன்களை எடுத்தது.
இந்தப் போட்டியில் சதமடித்ததன் மூலம் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தனது, பத்தாவது சத்தத்தை பதிவு செய்து அசத்தியுள்ள்ளார். மேலும் சர்வதேச டெஸ்டில் இரண்டாவது முறையாக 150 ரன்களை கடந்துள்ளார்.
இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்களையும், 150க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் வீழ்த்திய இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். மேலும் உலகின் தலை சிறந்த ஆல்ரவுண்டர் பட்டியலிலும் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.