ETV Bharat / sports

பிராட், வோக்ஸ் மேகத்தில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்; தொடரை வென்ற இங்கிலாந்து!

author img

By

Published : Jul 29, 2020, 10:46 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி  269 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

Eng v WI 3rd Test: Woakes, Broad help England crush Windies by 269 runs, win series 2-1

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றதால் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இதைத்தொடர்ந்து இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 369 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் அணி 197 ரன்கள் எடுத்தன. இதனால் 172 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.

இதையடுத்து 399 ரன்கள் இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோரது பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் இங்கிலாந்து அணி இப்போட்டியில் 269 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இப்போட்டியில் பேட்டிங்கில் 62 ரன்களும் பவுலிங்கில் 10 விக்கெட்டுகளும் ( முதல் இன்னிங்ஸில் ஆறு+ இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு) கைப்பற்றிய ஸ்டூவர்ட் பிராட் ஆட்டநாயகன் விருதையும் தொடர்நாயகன் விருதையும் பெற்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.