ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஆடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோ தமிழ்நாடு ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். கிரிக்கெட், இசை, பாடல், டான்ஸ் என பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி வரும் பிராவோ ஒரு சில தமிழ், இந்தி பாடல்களில் தோன்றியுள்ளார்.
இவர் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து கேட்கையில், மரியாதை நிமித்தமான சந்திப்புதான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து கமல்ஹாசனை சந்தித்த நிலையில், தற்போது பிராவோ சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியிலும், கமல் ரசிகர்கள் மத்தியிலும் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: வள்ளுவனை சந்தித்த சிஎஸ்கேவின் வல்லவன்