கரோனா வைரசால் கிரிக்கெட் மூன்று மாதங்களாக தங்களது வீட்டில் ஓய்வில் உள்ளனர். இதனால் கிரிக்கெட் பற்றிய பேச்சு ரசிகர்களிடையே இருப்பதற்காக வீரர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்ற வீரர்களுடன் உரையாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக வெஸ்ட் இன்டீஸ் அணியின் சீனியர் வீரர் பிராவோ ஜிம்பாப்வே வீரர் பொம்மி பாங்வாவுடன் உரையாடினார். அப்போது சிஎஸ்கே அணியுடனான உறவு பற்றி பிராவோவிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த பிராவோ, "சிஎஸ்கே அணியின் தொடர் வெற்றிகளுக்கு பெரும்பங்கற்றுவது தோனியும், ப்ளெம்மிங்கும் தான். சிஎஸ்கே அணியின் சூழல் எப்போதும் நன்றாக விளையாடுவதற்கு உதவியாக இருக்கும்.
சர்வதேச கிரிக்கெட்டின் மாபெரும் சூப்பர் ஸ்டார் தோனி தான். ஆனால் பேசுவதற்கும் பழகுவதற்கும் எளிமையானவர். விளையாடாத நேரங்களை வீடீயோ கேம்ஸில் தான் செலவிடுவார்.
சிஎஸ்கே அணி எப்போதும் கொஞ்சம் ஸ்பெஷலான அணி. அதன் ரசிகர்கள் எப்போதும் உண்மையாக இருப்பார்கள்" என்றார்.