ETV Bharat / sports

சச்சினுக்கு யூனுஸ் விட்ட கேட்ச்... இந்திய உலகக்கோப்பை வரலாற்றில் மறக்க முடியாத ஆட்டம்!

author img

By

Published : Mar 30, 2020, 11:34 AM IST

Updated : Mar 30, 2020, 6:05 PM IST

''எனது வாழ்நாளில் நான் ஆடிய கிரிக்கெட் போட்டிகளிலேயே அதிகமாக ப்ரஷர் இருந்த ஆட்டம் இதுதான்'' என இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்திருந்தார்.

dramatic-semi-final-victory-against-pakistan-before-worldcup-win-in-2011

கரோனாவால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ், பேட்மிண்டன் என அனைத்து விளையாட்டு போட்டிகளும் எப்போது மீண்டும் நடக்கும் என தெரியவில்லை. சரியாக சொல்லவேண்டுமென்றால் நேற்று ஐபிஎல் போட்டிகள் தொடங்கி, இந்தியாவே திருவிழாக்கோலம் பூண்டிருக்க வேண்டும்.

ஆனால் கரோனா என்னும் சோதனைக்காலம் மக்களையும், விளையாட்டு ரசிகர்களையும் கொஞ்சம் அதிகமாகவே கொடுமையில் தள்ளியுள்ளது. சென்னை முழுவதும் மஞ்சள் சாயத்தால் சென்னை அணியை வரவேற்கக் காத்திருந்த நேரத்தில், தற்போது ஊரே பெரும் அமைதியில் உள்ளது. இந்த அமைதியை சில நிமிடம் ஒத்தி போடுவதற்காக சில நாஸ்டால்ஜியா நினைவுகளைப் பற்றி பலரும் பகிர்ந்து வருகிறார்கள். அப்படி ஒரு நாஸ்டால்ஜியா நாள் இன்று...

மார்ச் 30, 2011. சர்வதேச அளவில் ஒரு கிரிக்கெட் போட்டியை 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் டிவி முன் அமர்ந்து கண்டுகளித்தப் போட்டி... இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம், அதுவும் உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதி. இதைப்பார்க்க 100 மில்லியன் மக்கள் டிவி முன் அமரவில்லை என்றால் தான் ஆச்சர்யம். 2008 மும்பை தாக்குதலுக்கு பின், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் தங்களுக்கு இடையே கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவேயில்லை.

சச்சின் - அப்ரிடி
சச்சின் - அப்ரிடி

ஆனால் ஐசிசி உலகக்கோப்பைத் தொடர் என்பதால் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆடின. அதுவும் இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மோதியது. அதற்கு முன்னதாக இந்தப் போட்டியைப் பார்க்க இந்தியாவின் அந்நாள் பிரதமர் மன்மோகன் சிங் - பாகிஸ்தானின் அந்நாள் பிரதமர் யூசுப் ராசாவைப் போட்டியை காண அழைப்பு விடுத்தார். இதையடுத்து இருநாட்டு பிரதமர்களும் மைதானத்தில் இருந்தது, போட்டி மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாகியது.

அதுபோக, உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வியடைந்ததில்லை என்ற பேச்சும் அடிபட போட்டிக்கு முன்னதாக அனல் கிளம்பியது. அதேபோல் டிஃபெண்டிங் சாம்பியன் ஆஸ்திரேலியாவின் மூன்று உலகக்கோப்பைகளின் பெற்ற தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்ததால் பாகிஸ்தான் ரசிகர்கள் இம்முறை தெம்புடன் மைதானத்தில் அமர்ந்திருந்தார்கள்.

அந்த உலகக்கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சச்சின் 99ஆவது சர்வதேச சதத்தைப் பதிவு செய்திருந்தார். இந்தப் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடி, சச்சினை எங்களுக்கு எதிராக சதம் அடிக்க விடமட்டோம் எனக் கூறியது ரசிகர்களை இன்னும் உக்கிரமாக்கியது.

இரு நாட்டு கேப்டன்களும் களத்திற்கு வருகிறார்கள். டாஸில் பாகிஸ்தான் தோல்வி. தோனி பேட்டிங்கைத் தேர்வு செய்ய, சச்சின் - சேவாக் என்னும் ஜாம்பவான்கள் களமிறங்குகிறார்கள். உலகக்கோப்பைத் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் பவுண்டரி அடித்து இந்திய அணியின் ஸ்கோர் கணக்கைத் தொடங்கி வைத்த சேவாக், வழக்கம்போல் உமர் குல் பந்தில் கவர்ஸில் பவுண்டரியை அடிக்க ஆட்டத்தில் நெருப்புப் பற்ற வைக்கப்பட்டது.

சேவாக் பவுண்டரிகளாக அடித்து பாகிஸ்தான் வீரர்களை பதறவைக்க, இந்திய அணியின் ஸ்கோர் 5 ஓவர்களில் 47 ரன்களைத் தொட்டது. 6ஆவது ஓவரின்போது சேவாக் 9 பவுண்டரிகளுடன் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த கம்பீர் - சச்சின் இணை இந்திய அணியின் ஸ்கோரை நிதானமாக உயர்த்தியது. 16 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்த இந்திய அணி, அடுத்த சில ஓவர்களில் கம்பீரை இழந்தது.

தோனி விக்கெட்டை வீழ்த்திய ரியாஸ்
தோனி விக்கெட்டை வீழ்த்திய ரியாஸ்

20 ஓவர்களுக்கு 119 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்த இந்திய அணி, 40 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. வஹாப் ரியாஸ் வீசிய ஒரு ஓவரில் விராட் கோலி, யுவராஜ் சிங் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

கடைசி நேரத்தில் டெய்லண்டர்களுடன் இணைந்து சுரேஷ் ரெய்னா காட்டிய பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 260 ரன்களை எடுத்தது. அந்தத் தொடர் முழுவதும் சுரேஷ் ரெய்னாவை ட்ரெம்ப் கார்டாகவே தோனி பயன்படுத்தினார். காலிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் சரி, அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் சரி. ரெய்னா ஆடிய ஆட்டத்தின் முக்கியத்துவம் இன்று வரை ரசிகர்களால் உணரப்படாமலேயே உள்ளது.

261 ரன்கள் என்ற இலக்கு வெற்றிக்கான இலக்கு இல்லை என்றாலும், அந்த இலக்கை வைத்து நிச்சயம் சண்டை செய்யலாம். பாகிஸ்தானுக்கு கம்ரான் அக்மல் - முகமது ஹஃபீஸ் தொடக்கம் கொடுத்தனர். சேவாக் அடித்த பவுண்டரிக்கு பதிலாக கம்ரான் அக்மல் பவுண்டரி அடித்து பாகிஸ்தான் ஸ்கோரைத் தொடங்கினார். 8 ஓவர்கள் வரை நிதானமாக ஆடிய இந்த இணை, 9ஆவது ஓவரில் ஜாகீர் கானிடம் சிக்கியது. கம்ரான் அக்மல் 19 ரன்களில் நடையைக் கட்ட, நன்றாக ஆடியக்கொண்டிருந்த ஹஃபீஸ் 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் யுவராஜ் - ரெய்னா

அதையடுத்து பாகிஸ்தான் அணியைத் தூண் போல் நின்று காப்பாற்றி வந்த யூனுஸ் கான் களமிறங்கினர். இவருடன் சஃபீக் இணைய, இருவரும் நிதானமாகவே ரன்கள் சேர்த்தனர். இவர்கள் இருவரும் மைதானத்திற்குள் நுழையும் போதே யுவராஜ் சிங் கைகளில் பந்து கொடுக்கப்பட்டது. இவர்கள் இருவரின் விக்கெட்ட்யையும் விரைவாகக் கைப்பற்றினால் தான் ஆட்டம் நம் கைகளில் என ரசிகர்கள் நினைத்தபோதே, இருவரையும் அடுத்தடுத்த ஓவர்களில் யுவராஜ் சிங் வெளியேற்ற, ஆட்டம் இந்திய அணியின் கைகளில் வந்தது.

பின்னர் மிஸ்பா உல் ஹாக் என்னும் ராட்சசனுடன் உமர் அக்மல் இணைந்து அதிரடியில் புரட்டி எடுக்க, என்னடா இது புது பிரச்னை என ரசிகர்கள் நினைக்கத் தொடங்கினர். ஆனால் அந்தத் தொடர் முழுவதும் விக்கெட் தேவைப்படும் போதெல்லாம் ஹர்பஜன் சிங் கைகளில் பந்து சென்றது போல், இம்முறையும் அவரிடமே பந்தை தோனி கொடுத்தார். இத்தனைப் போட்டிகளில் எப்படி பார்ட்னர்ஷிப் ப்ரேக்கராக செயல்பட்டாரோ அதேபோல் இந்தப் போட்டியிலும் ஹர்பஜன் சிங் உமர் அக்மலை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

ஆனால் இந்திய அணியின் வேலை முடியவேண்டும் என்றால் அப்ரிடி இருக்கக் கூடாது. அப்ரிடியின் விக்கெட்டை எவ்வளவு வேகமாகக் கைப்பற்றுகிறோமோ அந்த அளவிற்கு வெற்றி நம் கண்களுக்கு அருகில் தெரியும். எப்போதும் அதிரடியாக ஆடும் அப்ரிடி இந்தப் போட்டியில் சிங்கிள்களாக தட்டிக்கொண்டிருந்தார். ஆனால் வெகு நேரம் அவரால் பொருமையாக ஆட முடியவில்லை. ஹர்பஜன் வீசிய பந்தில் சேவாக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, பாகிஸ்தான் அணி 184 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. 48 பந்துகளுக்கு 77 ரன்கள் எடுக்க வேண்டும். டெய்லண்டர்களுடன் மிஸ்பா நங்கூரம் பாய்ச்சி நிற்கிறார்.

அப்ரிடி- சச்சின் - சேவாக்
அப்ரிடி- சச்சின் - சேவாக்

2007 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியைப் போல் கடைசி ஓவர் வரை ஆட்டம் சென்றுவிடக்கூடாது என ரசிகர்கள் உள்ளே நினைக்க, மிஸ்பா பவுண்டரி சிக்சர்களாக விளாசி இந்திய ரசிகர்களை பதற வைக்கிறார். கடைசி 10 பந்துகளுக்கு 30 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டும் ஆட்டத்தில் பரபரப்பு குறையவில்லை. கடைசி ஓவரில் 30 ரன்கள் எடுக்க வேண்டும் என்றபோது தான் ரசிகர்கள் நிம்மதியடைந்தார்கள். ஆனால் ஒரு 49 ஓவரின் 5ஆவது பந்தில் மிஸ்பா 56 ரன்களில் ஆட்டமிழந்ததும், இந்திய அணிக்காக இறுதிப் போட்டியின் கதவுகள் திறந்தது.

இந்தப் போட்டியைப் பற்றி சச்சின் தனது புத்தகத்தில், ''2011ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி தான் எங்களுக்கு இறுதிப் போட்டி போல் இருந்தது. எனது வாழ்நாளில் நான் ஆடிய கிரிக்கெட் போட்டிகளிலேயே அதிகமாக ப்ரஷர் இருந்த ஆட்டம் இதுதான். அதனை எவ்வாறு சொல்வது எனவும் தெரியவில்லை. உலகக்கோப்பைத் தொடரின் சிறந்தப் போட்டியும் அதுதான்'' எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் போட்டியில் 85 ரன்கள் எடுத்த சச்சின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இந்தப் போட்டியில் சச்சினுக்கு நான்கு முறை பாகிஸ்தான் வீரர்கள் கேட்ச் மிஸ் செய்தனர். அதேபோல் சச்சின் 23 ரன்கள் எடுத்திருந்தபோது, எல்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுக்க, சச்சின் டிஆர்எஸ் கேட்டபோது, விக்கெட் இல்லை என தெரிந்தது. சச்சினின் விக்கெட் தான் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு மிகமுக்கிய காரணமாகப் பார்க்கப்பட்டது.

ஆட்டநாயகன் சச்சின்
ஆட்டநாயகன் சச்சின்

இந்தப் போட்டி மட்டுமல்ல... 1992ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை வரை உலகக்கோப்பைத் தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆடிய அனைத்து போட்டிகளிலும் ஆடிய ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர் தான். பாகிஸ்தானுக்கு எதிராக 6 உலகக்கோப்பைப் போட்டிகளில் ஆடி மூன்று முறை ஆட்டநாயகன் விருது வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இந்தப் போட்டி மீண்டும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-இல் ரெட்ரோ நேரலையாக ஒளிபரப்பவுள்ளதால், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்தப் போட்டி குறித்த நியாபகங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நாத்திகர்களுக்கும் பிடித்த கடவுள் 'சச்சின் டெண்டுல்கர்!'

Last Updated : Mar 30, 2020, 6:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.