ETV Bharat / sports

தோனி கிரிக்கெட்டுக்கு வந்தது எதற்காக? வாசிம் ஜாஃபர் பதில்

author img

By

Published : Mar 30, 2020, 9:01 AM IST

இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தோனி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Dhoni wanted to earn Rs 30 lakh and live peacefully in hometown, recalls Wasim Jaffer

கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இதுவரை உலகம் முழுவதும், ஏழு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 33ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இதனால் இன்று தொடங்குவதாக இருந்த 13ஆவது சீசன் ஐபிஎல் தொடர், ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியைப் பற்றி, முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் மனம் திறந்துள்ளார். ட்விட்டரில் #AskWasim என்ற ஹாஷ்டாக்கைப் பயன்படுத்தி ரசிகர்கள் தன்னிடம் கேள்விகளைக் கேட்கலாம் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ரசிகர் ஒருவர் உங்களுக்கு தோனியுடன் பிடித்த நினைவு எது? என்ற கேள்வியை எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த வாசிம், தோனி இந்திய அணியில் இணைந்த தொடக்கத்தில் அவர் என்னிடம், கிரிக்கெட் மூலம் ரூ.30 லட்சம் சம்பாதிக்க வேண்டும், பிறகு அதனைக் கொண்டு தனது சொந்த ஊரான ராஞ்சியில் நிம்மதியாக வாழ வேண்டுமென கூறியதை இன்றளவும் என்னால் மறக்க இயலாது என்றார்.

இதையும் படிங்க:தோனிதான் கேப்டன்... இதுதான் வாசிம் ஜாஃபரின் சிறந்த ஐபிஎல் அணி
!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.