ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் விரைவில் தொடங்கவுள்ளது. சில ஆண்டுகளாக போட்டியை சாதகமாக முடிப்பதற்கு ஃபினிஷர் இல்லாமல் தவித்து வரும் ஆஸ்திரேலிய அணி, சரியான ஃபினிஷரைத் தேடிவருகிறது.
இதுகுறித்து அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், '' ஆஸ்திரேலிய அணியில் எப்போதும் சரியான ஃபினிஷரோடு வலம் வந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் மைக் ஹசி, மைக்கில் பெவன் ஆகியோர் ஆஸ்திரேலிய அணிக்கு சிறந்த ஃபினிஷிங்கைக் கொடுத்து வந்தனர். ஆனால், இப்போது ஃபினிஷிங்கில் சரியான ஆள் இல்லாமல் இருப்பது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணிக்கு தோனி சிறந்த ஃபினிஷிங்கில் மாஸ்டராக செயல்பட்டு வந்தார். அதேபோல் இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லர் சிறந்த ஃபினிஷராக உருமாறியுள்ளார்'' எனக் கூறினார்.
தற்போது ஆஸ்திரேலிய அணியின் ஆறாவது இடத்தில், ஆல் ரவுண்டர் மிட்சல் மார்ஷ் களமிறங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் உலகக்கோப்பைத் தொடருக்குப் பின் தோனி, 'சர்வதேச கிரிக்கெட்டை ஆடவில்லை' என்றாலும்; தோனியின் செயல்கள் பற்றி தொடர்ந்து பல்வேறு அணியினரும், இந்திய ரசிகர்களும் பேசிவருகின்றனர்.
தோனி பற்றி ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர் புகழ்ந்துள்ளது, அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'தளபதி' ஸ்டைலில் 'தல' சொல்லப்போகும் குட்டி ஸ்டோரி... - வைரலாகும் ஹர்பஜன் ட்வீட்!