இந்திய அணியின் நட்சத்திர வீரராக வலம்வருபவர் தமிழ்நாட்டை சேர்ந்த தினேஷ் கார்த்திக். இந்நிலையில் இவர் தனியார் விளையாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி முன்பிருந்தது போலவே தற்போதும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய தினேஷ் கார்த்திக், "2003 - 2004 ஆம் ஆண்டில், நான் தோனியுடன் எனது முதல் சுற்றுப்பயணத்திற்குச் சென்றபோது, அவர் மிகவும் எளிமையாகவும், நிதானமானவராகவும் இருந்தார். அப்போதிருந்து தோனி இப்போது வரையிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார். அவரது வெள்ளை முடிகளை தவிர. அவர் கோபத்தை வெளிப்படுத்தி இதுநாள் வரை நான் பார்த்ததில்லை. அதன் கரணமாகவே அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.