ETV Bharat / sports

தோனி தனித்திறன் படைத்தவர்; அரிதான ஒருவர் - சவுரவ் கங்குலி! - சவுரவ் கங்குலி

பிசிசிஐயின் தலைவர் சவுரவ் கங்குலி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனித்திறன் படைத்தவர் என்றும், அவர் மிகவும் அரிதான ஒருவர் என்றும் தெரிவித்துள்ளார்.

Dhoni had superb big-hitting abilities; he was rare, says Ganguly

author img

By

Published : Aug 23, 2020, 6:19 PM IST

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி கடந்த ஆக.15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தோனியின் முடிவுக்கு பல்வேறு துறை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பிசிசிஐயின் தலைவர் சவுரவ் கங்குலி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தோனி தனித்திறன் படைத்தவர் என்றும், அவர் ஒரு அரிதான வீரர் என்றும் புகழ்ந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய கங்குலி, ‘தோனியை மூன்றாவது இடத்தில் களமிறக்கியது குறித்து இன்றும் பலர் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். அவர்களிடம் நான் செல்வது ஒன்றுதான். சச்சினை நீங்கள் 6ஆவது இடத்தில் களமிறக்கியிருந்தால், அவர் இன்று சச்சினாக இருந்திருக்க மாட்டார்.

அதுபோல தான் தோனியும். ஒரு வீரர் ஓய்வறையில் இருந்து கொண்டு சிறப்பாக விளையாட முடியாது. அதேபோல் ஒருவரின் திறனை அறிந்து அவரது பேட்டிங் வரிசையை மாற்றினால் அது நாம் எதிர்பார்த்ததை விட அதிக பலனைத் தரும் என்பதை நான் நம்புகிறேன்.

ஏனெனில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் நாங்கள் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். அப்போது தான் தோனியை மூன்றாவது இடத்தில் களமிறக்கினோம். அந்த போட்டியில் தோனி சதமடித்து ஆட்டத்தின் போக்கை முற்றிலுமாக மாற்றி விட்டார்.

மகேந்திர சிங் தோனி
மகேந்திர சிங் தோனி

அதுமட்டுமில்லாமல் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் பெரிய ஸ்கோரை குவித்து, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும் அவர் சிக்சர் விலாசும் தனித்திறனையும் பெற்றிருந்தார். அவரது பேட்டின் சுழற்சி வேகம் எங்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. அதனால்தான் அவர் என்றும் ஒரு அரிதான வீரர்.

நான் எனது ஓய்வை அறிவித்த பிறகு, தோனி அதிக முறை முதல் வரிசை வீரராக களமிறங்க வேண்டுமென நான் எனது கருத்துகளைத் தெரிவித்துள்ளேன்’ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:‘பார்வையாளர்களின்றி நடைபெறும் கிரிக்கெட் சவாலானது’ - ஸ்டீவ் ஸ்மித்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.