ETV Bharat / sports

எல்லாவற்றையும் நல்லவிதமாகவே அணுகுகிறேன்: தவான்

author img

By

Published : Jan 6, 2020, 7:38 PM IST

கவுகாத்தி: இந்திய அணிக்காக ஆடும் வீரர்களின் பங்களிப்பு அனைத்தையும் நல்லவிதமாகவே அணுகுகிறேன் என இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

dhawan-looking-to-become-more-impactful-player-ahead-of-t20-world-cup

நீண்ட நாள் ஓய்வுக்குப் பிறகு இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். இலங்கை அணிக்கு எதிராக நேற்று நடைபெறவிருந்த முதல் டி20 போட்டியில் ஷிகர் தவான் களமிறங்க வேண்டிய நிலையில், பிட்ச்சின் ஈரத்தால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், தொடக்க வீரர் ஷிகர் தவான் அணிக்கு திரும்பியுள்ளது குறித்து பேசுகையில், ‘கடந்த ஆண்டு அதிகமான காயங்களால் தவித்துவந்தேன். விளையாட்டில் அதுவும் ஒரு அங்கம் தான். இந்த வருடத்தை மிகவும் எதிர்நோக்கியுள்ளேன். முக்கியமாக நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணிக்காக பங்கேற்று உலகக்கோப்பையைக் கைப்பற்றுவதே எனது குறிக்கோள்’ என்றார்.

ஷிகர் தவான் காயத்தால் அவதியடைந்த நிலையில், அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் தொடக்க வீரராகக் களமிறங்கி பெரும் பங்களிப்பை வழங்கினார். இது தவான் ஆட்டத்தில் ப்ரஷரை ஏற்படுத்துமா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘நான் எப்போதும் எல்லாவற்றையும் நல்லவிதமாகவே அணுகுகிறேன். அதனால் தான் காயங்களில் இருந்து விரைவில் வெளிவர முடிகிறது. நான் எனது ஆட்டத்தை மேம்படுத்தி வந்துள்ளேன். இப்போதும் புதிய ஷாட்களை விளையாடக் கற்றுக்கொண்டுள்ளேன். கிரிக்கெட்டை ரசித்து விளையாடி வருகிறேன்’ என்றார்.

இதையும் படிங்க: 'டெஸ்ட் கிரிக்கெட் அழிவதை கங்குலி ஏற்றுக்கொள்ளமாட்டார்' - சோயப் அக்தர்

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.