ETV Bharat / sports

பாக்ஸிங் டே டெஸ்ட்: ரஹானே, ஜடேஜா ஆட்டத்தால் முன்னிலைப் பெற்ற இந்தியா; பதிலடி கொடுக்குமா ஆஸ்திரேலியா!

author img

By

Published : Dec 28, 2020, 7:12 AM IST

ஆஸ்திரேலியா அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்களை எடுத்துள்ளது.

Day 3: Lunch Break - India lead by 131 runs

மெல்போர்னில் நடைபெற்றுவரும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (டிச. 28) நடைபெற்றது. இதில் 277 ரன்களுடன் தனது மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் நேற்றைய தினம் சதமடித்து அசத்திய கேப்டன் ரஹானே 112 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகி ஆட்டமிழந்தார்.

இருப்பினும் ரஹானேவின் ரன் அவுட்டிற்கு காரணமான ரவீந்திர ஜடேஜா மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். அதன்பின் அஸ்வின் 14 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, ஜடேஜாவும் 57 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்த வீரர்களும் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டியதால், இரண்டாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்பாகவே இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்களை எடுத்தது.

இந்திய அணி தரப்பில் கேப்டன் ரஹானே 112 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 57 ரன்களையும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் 131 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கவுள்ளது.

இதையும் படிங்க:அண்டர் 19 உலகக்கோப்பை முதல் ஆஸி.,தொடர் வரை: 2020 கிரிக்கெட் ஓர் அலசல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.