இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் தொடரின் 12வது சீசன் மார்ச் 23 ஆம் தேதி தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணியுடன் மோதவுள்ளது. இந்தப் போட்டி தோனியின் இரண்டவாது சொந்த ஊராக கருதப் படும் சென்னை சேப்பாக்கம் மைாதனத்தில் நடைபெறவுள்ளது.
தோனி, கோலி இருவரும் மீண்டும் நேருக்கு நேர் மோதுவுள்ள இந்தப் போட்டியின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் செய்யும் வகையில், ஐபிஎல் நிர்வாகம் தனது ட்வீட்டர் தளத்தில் பிரத்யேக விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தோனி, கோலி இருவரின் ரசிகர்களும் சென்னை, பெங்களூரு அணிக்கு போட்டிப் போட்டு ஆதரவை வெளிபடுத்துவதை தோனி கோலி இருவரும் கையில் டி கிளாஸை வைத்துக் கொண்டு மொட்டை மாடி மேல் இருந்து பார்க்கின்றனர்.
Dhoni, Dhoni, @msdhoni or Kohli, Kohli, @imVkohli?
— IndianPremierLeague (@IPL) March 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
We can't wait for this battle of the greats. Match 1 of #VIVOIPL between @ChennaiIPL and @RCBTweets #GameBanayegaName pic.twitter.com/4ZzvAtZ8fa
">Dhoni, Dhoni, @msdhoni or Kohli, Kohli, @imVkohli?
— IndianPremierLeague (@IPL) March 14, 2019
We can't wait for this battle of the greats. Match 1 of #VIVOIPL between @ChennaiIPL and @RCBTweets #GameBanayegaName pic.twitter.com/4ZzvAtZ8faDhoni, Dhoni, @msdhoni or Kohli, Kohli, @imVkohli?
— IndianPremierLeague (@IPL) March 14, 2019
We can't wait for this battle of the greats. Match 1 of #VIVOIPL between @ChennaiIPL and @RCBTweets #GameBanayegaName pic.twitter.com/4ZzvAtZ8fa
இறுதியில், தோனி, கோலி என்று ரசிகர்கள் ஆதரவு தெரிவிப்பது எல்லாம் பெயர்கள் மட்டும்தான் என தோனி, கோலியிடம் கூறுகிறார். அதற்கு கோலியும், ஆம் சரிதான், இதில் யார் சிறந்தவர்கள் என்பது போட்டியின் போது தெரிவிந்துவிடும் என தோனியிடம் பதிலளிக்கிறார்.
பின் தோனி மார்ச் 23 ஆம் தேதி போட்டிக்கு தாமதாக வராமல் விரைவாக வா என கோலியிடம் கூறபின், தனது டி கிளாஸை மஞ்சள் நிற தட்டில் வைத்துவிட்டு வெளியேறுகிறார். அதவாது அந்தப் போட்டியில் சென்னை அணிதான் வெற்றிபெறும் என்பதை சூசகமாக வெளிபடுத்தினர்.
இதைக் கண்ட கோலி, முகத்தில் சற்று சிரிப்புடன் பக்கத்தில் இருக்கும் சிவப்பு நிற தட்டை எடுத்து தோனியின் டி கிளாஸ் மேல் மூடி வைத்தார். இதன் மூலம் சென்னை மண்ணில் பெங்களூரு அணிதான் வெற்றிபெறும் என்பதை அவர் மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.
இவ்விரு வீரர்களும் தங்களது அணிதான் சிறந்தது என்பது வெளிபடுத்தி இந்த அல்டிமெட் விளம்பரம் இணையளத்தில் வைரலாகி வருகிறது.