இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கரோனா வைரஸ் ஊரடங்கால் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி, ஐபிஎல் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திரசிங் தோனி ராஞ்சியிலிருந்து தனி விமானத்தில் இன்று (ஆகஸ்ட் 14) சென்னை வந்தார். இந்த அணியில் உள்ள சுரேஷ் ரெய்னா, ஹா்பஜன் சிங் உள்ளிட்ட 6 விளையாட்டு வீரா்களும் அதே தனி விமானத்தில் சென்னை வந்தனர்.
வீரர்கள் அனைவரும் சென்னையில் உள்ள பிரபல தனியார் விடுதியில் தங்கி, சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நாளையிலிருந்து(ஆகஸ்ட் 15) பயிற்சியில் ஈடுபடுகின்றனா். இப்பயிற்சி வரும் 20ஆம் தேதி வரை சென்னையில் நடக்கிறது. பின்பு வருகின்ற 21ஆம் தேதி தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியினா், சென்னையிலிருந்து துபாய் புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.
சென்னை விமான நிலையத்திலிருந்து தோனி வெளிவரும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: சிஎஸ்கே வீரர் ரெய்னா செய்த செயல் - ரசிகர்கள் நெகிழ்ச்சி!