ETV Bharat / sports

சிஎஸ்கே சிங்கங்களின் வரலாறு... விசில் போட ரெடியாகும் ரசிகர்கள்! - சாம்பியன்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி கடந்த வந்த பாதையை பற்றி சிறிய தொகுப்பு.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
author img

By

Published : Mar 20, 2019, 12:00 AM IST

Updated : Mar 20, 2019, 8:20 AM IST

இந்தியன் பிரீமியர் லீக் என்றழைக்கப்படும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 12வது சீசன் தொடங்க இன்னும் நான்கு நாட்களே உள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி வந்திறங்கினாலே... அந்த அணியின் பெயரைக் கேட்டாலே பிற அணிகளுக்கு லேசான கிலி ஏற்படும் என்றால்... அந்த அணியின் பெயர் சென்னை சூப்பர் கிங்ஸ். காரணம் சிஎஸ்கே ஆரம்பம் முதல் இன்றுவரை செய்யாத சாதனைகள் கிடையாது; தொடாத உயரம் கிடையாது.

2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை, 2008ஆம் ஆண்டு ஐபிஎல் முதல் தொடரில் விளையாடுவதற்காக சிஎஸ்கே அணியின் நிர்வாகம் வாங்கியது. அவர் தொட்டால் எல்லாம் பொன்னாகும் என்பார்கள் அது போல்தான், அவர் தலைமை வகித்த சென்னை அணியை முதல் தொடரிலேயே இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

அந்த தொடரில் சிஎஸ்கே அணி ஆடிய முதல் போட்டியிலேயே 240 ரன்கள் குவித்து டி20 வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தது. அப்போட்டியில் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த மைக் ஹசி 116 ரன்கள் அடித்து அசத்தினார்.

அதன்பின்பு தொடரில் ஆதிக்கம் செலுத்திய சிஎஸ்கே இறுதிப்போட்டி வரை சென்று, கடைசி பந்தில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தது. ஆனால் அடுத்த தொடர் தேர்தல் காரணமாக தென்னாப்பிரிக்கவுக்கு மாற்றப்பட்டது. அப்போதும், அந்த அணி வெற்றிக்கனியை தொட முடியாமல் அரையிறுதிப் போட்டியோடு வெளியேறியது.

அந்த தோல்வியை அடுத்து பேட்டியளித்த சிஎஸ்கே கேப்டன் தோனி அணி வீரர்களிடம், பிற அணிகள் போல் நாம் ஊர் சுற்ற வரவில்லை. எனவே அடுத்த சீசன்களில் கோப்பையை வெல்லும் நோக்கில் விளையாட வேண்டும் என கடிந்துகொண்டார்.

இருப்பினும் அடுத்த சீசனிலும் சிஎஸ்கே அணி சற்று தடுமாற்றத்தையே சந்தித்தது. அந்த சீசனின் அரையிறுதிப் போட்டியில் முன்னேற வேண்டும் என்றால் பஞ்சாப் அணியை கட்டாயம் வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் சிஎஸ்கே அணிக்கு ஏற்பட்டது.

அப்போட்டியில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 191 ரன்கள் எடுத்திருந்தது. 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் 148 ரன்கள் வரை தாக்குப்பிடித்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் தோனிக்கு அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற பொறுப்பு ஏற்பட்டது.

அந்தத் தொடரில் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தாலும், சென்னை அணி அரையிறுதிக்குள் செல்லக் கூடாது என்ற எண்ணத்தில் ஆடினர். சிஎஸ்கேவின் விக்கெட்டுகள் விழும்போதெல்லாம் பஞ்சாப் அணி உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா குஷியில் துள்ளிக்குதித்தார்.

அப்போது, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையும் பிரீத்தி ஜிந்தா மீதுதான். அந்தப் பார்வையை தனது பேட்டின் மாயாஜலத்தால் தன்வசமாக்கினார். அந்தளவுக்கு அவரின் ஆட்டம் அதிரடியாகவும் ஆக்ரோஷமாகவும் இருந்தது.

ஆம் அப்போட்டியில்தான் பலரும் தோனியின் கோபத்தை பார்த்தார்கள். இறுதி கட்டத்தில் சிக்சர்களை பறக்கவிட்டு சிஎஸ்கேவை வெற்றி பெற வைத்ததோடு அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார் தோனி. அதைத் தொடர்ந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சென்னை அணி மும்பை அணியை அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்தி தனது முதல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

அடுத்தத் தொடரிலும் (2011) ஆதிக்கம் செலுத்திய சிஎஸ்கே தொடர்ச்சியாக இரண்டாவது கோப்பையை கைப்பற்றி பிற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது.

இதனைத் தொடர்ந்து, 2012, 2013, 2015 ஆகிய மூன்று சீசன்களிலும் பைனலுக்கு முன்னேறிய சிஎஸ்கே கொல்கத்தாவிடம் ஒருமுறையும், மும்பையிடம் (2013, 2014) இரண்டு முறையும் கோப்பையை நழுவவிட்டது.

இதனிடையே, 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஏழாவது ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், பிளேஆஃப் சுற்றில் பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறியது.

ஐபிஎல் தொடரைத் தவிர்த்து சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரிலும் இரண்டு முறை (2010, 2014) கோப்பையை கைப்பற்றியுள்ளது.

csk
சாம்பியன்ஸ் லீக் கோப்பை

சென்னை அணிக்கு மற்றொரு சறுக்கலாக 2015ஆம் ஆண்டு தொடரில், அந்த அணியின் உரிமையாளர் சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐபிஎல் தொடரில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் சுமத்தப்பட்டாலும், ரசிகர்கள் சென்னை அணிக்கு துணையாக இருந்து வந்தனர். அடுத்த இரண்டு சீசன்களில் சென்னை அணி விளையாடாவிட்டாலும், மைதானங்கள், மற்றும் சமூக வலைதளங்களில் அந்த அணிக்காக தொடர்ந்து குரல் எழுப்பிவந்தனர்.

எனினும் அந்த அணியின் வருகையை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருந்தனர். அதன்படி 2018ஆம் ஆண்டு தொடரில் புதியப்பொழிவுடன் சென்னை அணி திரும்பியது. அப்போது கூட அணியில் அதிகப்படியான சீனியர் வீரர்கள் இடம்பெற்றிருந்ததால் அந்த அணியை 'சீனியர் கிங்ஸ்' என சிலர் கலாய்த்தனர்.

csk
2018 கோப்பை கைப்பற்றிய சிஎஸ்கே

ஆனால் சீனியர் கிங்ஸ் மீண்டும் ஒருமுறை கோப்பையை எளிதாக கைப்பற்றி, நாங்கள் சீனியர் கிங்ஸ் மட்டுமல்ல கிரிக்கெட்டின் சூப்பர் கிங்ஸ் என நிரூபித்துக் காட்டினர்.

2011ஆம் ஆண்டில் கோப்பையை தக்கவைத்ததுபோல் 2019ஆம் ஆண்டிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை தக்கவைத்து நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் என சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளார்கள்.

Intro:Body:

dummy

Conclusion:
Last Updated : Mar 20, 2019, 8:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.