ETV Bharat / sports

'சிஎஸ்கேவில் தான் அனைத்தையும் கற்றேன்' : 'தல' தோனி உருக்கம்! - MS Dhoni

வாழ்க்கையிலும் சரி, கிரிக்கெட்டிலும் சரி, எனது கடினமான நேரங்களை எதிர்கொள்ள சிஎஸ்கே அணியில் தான் கற்றுக்கொண்டேன் என சென்னை அணியின் கேப்டன் 'தல தோனி' தெரிவித்துள்ளார்.

csk-has-helped-in-lot-of-tough-situations-in-life-dhoni

author img

By

Published : Mar 4, 2020, 9:06 PM IST

உலகக்கோப்பைத் தொடருக்குப் பின் ஓய்விலிருந்த தோனி, 13ஆவது ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ளார். ஏற்கெனவே சென்னை சேப்பாக்கத்தில் தோனி பயிற்சியைத் தொடங்கியுள்ளதால், சேப்பாக்கம் மைதானம் திருவிழா கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணியுடனான பிணைப்பு பற்றி தோனி பேசியுள்ளார்.

அதில், ''என்னை மேம்படுத்திக்கொள்ள சென்னை அணி மிகவும் அதிகமாகவே உதவியுள்ளது. கிரிக்கெட்டிலும் சரி, வாழ்க்கையிலும் சரி எனது கடினமான நேரங்களை எதிர்கொள்ள சிஎஸ்கே அணியால் தான் கற்றுக்கொண்டேன்.

'தல' என்று என்னை ரசிகர்கள் அழைப்பது, என் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பைக் காட்டுகிறது. 'தல' என்றால் சகோதரன் என்று பொருள். நான் சென்னையில் இருந்தாலும், தென் இந்தியாவில் எந்த இடத்தில் இருந்தாலும் ரசிகர்கள் 'தல' என்று தான் அழைக்கிறார்கள். அது மரியாதையோடு சேர்த்து அன்பையும் காட்டுவதாக உள்ளது.

கிரிக்கெட்டிலிருந்து சில மாதங்கள் விலகியிருந்தது என்னை நானே புதுப்பித்துக்கொள்ள உதவியது'' என்றார்.

இதையும் படிங்க: தோனி நினைக்கும் வரை ஆடட்டும்... இது நன்றிக்கான நேரமல்ல!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.