இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர் சுரேஷ் ரெய்னா. இவர் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தீடீரென அறிவித்து, ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
ரெய்னா கைது
இந்நிலையில் மும்பை விமான நிலையம் அருகேவுள்ள தனியார் கிளப் ஒன்றில் மும்பை காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கரோனா பாதுகாப்பு விதிகளை மீறியதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, பாடகர் குரு ரந்தவா உள்பட 34 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி கிளப்பைத் திறந்து வைத்திருந்தனர்.
தகுந்த இடைவெளியை கடைபிடிக்கவில்லை, முகக்கவசம் அணியாதது என கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எதையும் பின்பற்றாமல் அவர்கள் இருந்தனர்.
இதனால், அவர்கள் மீது தொற்று பரவும் வகையில் நடந்துகொள்வது என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.
ஜாமீனில் விடுதலை
அதன் பின்னர் சுரேஷ் ரெய்னா மற்றும் பாடகர் குரு ரந்தவா உள்ளிட்டோரை மும்பை காவல்துறையினர் ஜாமீனில் விடுதலை செய்தனர்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் கைது செய்யப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரஹானேவுக்கு ’ஹிடன் மெசேஜ்' வழங்கிய வாசிம் ஜாஃபர்!