ETV Bharat / sports

ஊழியர்களுக்கு தற்காலிக வேலையைத் தேடும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா! - கோவிட்-19 பெருந்தொற்று

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக ஜூன் இறுதி வரை பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு தற்காலிக வேலைவாய்ப்புகளை உருவாக்க தனது ஸ்பான்ஸர்களான வூல்வெர்த், சூப்பர் மார்கெட்டுகளை அனுகியுள்ளது.

cricket-australia-finding-temporary-jobs-for-laid-off-staff-at-supermarket

author img

By

Published : Apr 22, 2020, 4:39 PM IST

கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலகம் முழுதும் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மேலும் இதன் காரணமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் விளையாட்டு போட்டிகள் ஏதும் நடைபெறாமல் உள்ளதால் கிரிக்கெட் வாரியங்களில் பணிபுரிந்தவர்களுக்கு சரியான ஊதியத்தை கொடுக்க முடியாமல் வாரியங்கள் திணறி வருகின்றன. தற்போது இதே சூழலில் தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் சிக்கித்தவித்து வருகிறது. அவ்வாரியத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு 20 முதல் 80 விழுக்காடு ஊதியப்பிடித்தம் செய்துவருகின்றது. அதேசமயம் ஒரு சில ஊழியர்களை ஜூன் மாதம் வரை இடை நீக்கம் செய்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் செயல் அலுவலர் கெவின் ராபர்ட்ஸ் கூறுகையில், விளையாட்டுப் போட்டிகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால், வாரியத்திற்கு தேவையான வருவாய் முற்றிலுமாக பாதிப்படைந்துள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணியின் ஸ்பான்ஸர்களில் ஒருவரான வூல்வெர்த்திடம் (Woolworth), தங்களது பணியாளர்களை அவர்களது தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட்
ஆஸ்திரேலிய கிரிக்கெட்

அதேசமயம் சிலர், நாட்டிலுள்ள மற்ற நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் என தற்காலிக வேலைகளுக்கு செல்கின்றனர். மேலும் ஆட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டிற்கு வரவேண்டிய 40-50 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது, என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'வனவிலங்குகளைக் காப்பாற்ற கையெழுத்திடுங்கள்' - பீட்டர்சன் வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.