ஆஸ்திரேலியாவில் நடப்பு சீசனுக்கான மகளிர் பிக் பாஷ் டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீராங்கனை எமிலி ஸ்மித் (விக்கெட் கீப்பர்) ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார். கடந்த நவம்பர் 2ஆம் தேதி ஹோபார்ட் ஹரிகேன்ஸ் - சிட்னி தண்டர்ஸ் மகளிர் அணிகளுக்கு இடையிலான டி20 லீக் போட்டி டாஸ்மேனியாவில் நடைபெறவிருந்தது. இப்போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக, எமிலி ஸ்மித் தனது அணியின் லைன் அப் குறித்த தகவல்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
இது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஊழல் தடுப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும். எமிலி ஸ்மித், தனது அணி குறித்த தகவல்களை இணையதளத்தில் வெளியிட்டதால், ரசிகர்கள் சூதாட்டத்தில் ஈடு வாய்ப்புள்ளது. எனவே, ஊழல் தடுப்பு சட்டத்தை மீறி நடந்துக்கொண்ட குற்றத்திற்காக கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம் எமிலி ஸ்மித்திற்கு ஓராண்டு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால், அவர் ஓராண்டிற்கு எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
-
JUST IN: A social media post has seen Hobart's Emily Smith banned for the remainder of the @WBBL season: https://t.co/2YDTF1g4oc pic.twitter.com/hvcB3nTlXr
— cricket.com.au (@cricketcomau) November 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">JUST IN: A social media post has seen Hobart's Emily Smith banned for the remainder of the @WBBL season: https://t.co/2YDTF1g4oc pic.twitter.com/hvcB3nTlXr
— cricket.com.au (@cricketcomau) November 18, 2019JUST IN: A social media post has seen Hobart's Emily Smith banned for the remainder of the @WBBL season: https://t.co/2YDTF1g4oc pic.twitter.com/hvcB3nTlXr
— cricket.com.au (@cricketcomau) November 18, 2019
இதன் விளைவாக தற்போது பிக் பாஷ், 50 ஓவர் நேஷனல் கிரிக்கெட் லீக் தொடர்களிலிருந்தும் எமிலி ஸ்மித் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக டாஸ்மேனியாவைச் சேர்ந்த மற்றொரு விக்கெட் கீப்பர் வீராங்கனை எம்மா மனிக்ஸ் தற்போது ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், ஹோபார்ட் ஹரிகேன்ஸ் - சிட்னி தண்டர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த போட்டி அதிர்ஷ்டவசமாக மழையால் ரத்தானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பந்தை சேதப்படுத்தி மாட்டிய வெஸ்ட் இண்டீஸ் வீரருக்கு ஸ்டீவ் ஸ்மித் ஆதரவு!