கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இதுவரை இந்தியாவில் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 10 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இதனால் வைரஸ் பரவுதலைத் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 24ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முகமது கைஃப் தனது ட்விட்டர் பக்கத்தில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, கைஃப் இங்கிலாந்து வீரர் பால் காலிங்வுட்டை ரன் அவுட் செய்த காணொலியை பதிவிட்டு, ‘வீட்டிலேயே இருங்கள்; பாதுகாப்பாகவும் இருங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.
-
अंदर रहें, सुरक्षित रहें 🙏🏼#ThrowbackThursday #Lockdown21 pic.twitter.com/i0mgojfloE
— Mohammad Kaif (@MohammadKaif) March 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">अंदर रहें, सुरक्षित रहें 🙏🏼#ThrowbackThursday #Lockdown21 pic.twitter.com/i0mgojfloE
— Mohammad Kaif (@MohammadKaif) March 26, 2020अंदर रहें, सुरक्षित रहें 🙏🏼#ThrowbackThursday #Lockdown21 pic.twitter.com/i0mgojfloE
— Mohammad Kaif (@MohammadKaif) March 26, 2020
தற்போது முகமது கைஃபின் ட்விட்டர் பதிவு அவரது ரசிகர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக நேற்று (மார்ச் 25) இந்திய அணியின் ரவிசந்திரன் அஸ்வின், ஐபிஎல் தொடரின் போது ஜோஸ் பட்லரின் விக்கெட்டை ‘மான்கட்’ முறையில் வீழ்த்திய புகைப்படத்தை பதிவிட்டு பொதுமக்களை பாதுகாப்பாக இருக்கும்படி கூறியுள்ளார்.
இதையும் படிங்க:கோவிட்-19: ‘மான்கட்டை’ சுட்டிக்காட்டி பொதுமக்களை வீட்டிலிருக்க சொன்ன அஸ்வின்!