கடந்தாண்டு ஜூலை 14இல் லார்ட்ஸில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி, பவுண்டரி கணக்கு விதிப்படி சாம்பியன் பட்டத்தை வென்றது.
சூப்பர் ஓவரின் கடைசி பந்தில் நியூசிலாந்து அணிக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இரண்டாவது ரன் ஓட முயற்சிக்கும்போது நியூசிலாந்து வீரர் மார்டின் கப்திலை இங்கிலாந்து அணியின் விக்கெட்கீப்பர் ஜாஸ் பட்லர் ரன் அவுட் செய்தார். இதனால்தான் இங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பை கிடைத்தது.
இந்நிலையில், கோவிட்-19 தொற்றுக்கு நிதி திருட்டும்விதமாக இந்தப் போட்டியில் பயன்படுத்திய சிறப்புமிக்க ஜெர்சியைத்தான் (டி ஷர்ட்) ஏலத்தில் விடப்போவதாக பட்லர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலி வெளியிட்ட அவர், "ஹலோ ரசிகர்களே, நீங்கள் அனைவரும் உங்களது வீட்டில் பாதுகாப்புடன் இருக்கிறீர்கள் என நம்புகிறேன். கோவிட் 19 தொற்று தடுப்பு நடவடிக்கையில் மருத்துவப் பணியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். எதிர்வரும் நாள்களில் அவர்களுக்கு நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
கடந்த வாரம் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராயல் பிராம்ப்டன், ஹார்ஃபீல்ட் மருத்துவமனைமகளின் தொண்டு நிறுவனங்கள் மருத்துவ உபகரணங்களை வழங்கினர்.
இதனால், அவர்களுக்கு நிதி திரட்டும்விதமாக நான் எனது உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பயன்படுத்திய ஜெர்சியை ஏலத்தில் விடவுள்ளேன்" எனப் பேசினார்.
-
Please retweet @ABdeVilliers17 @faf1307 @ImRaina pic.twitter.com/FunJCNayP0
— Jos Buttler (@josbuttler) March 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Please retweet @ABdeVilliers17 @faf1307 @ImRaina pic.twitter.com/FunJCNayP0
— Jos Buttler (@josbuttler) March 31, 2020Please retweet @ABdeVilliers17 @faf1307 @ImRaina pic.twitter.com/FunJCNayP0
— Jos Buttler (@josbuttler) March 31, 2020
கோவிட்-19 தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை உலகளவில் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக, பிரிட்டனில் மட்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதியானது. அவர்களில் 1,500 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: மருத்துவர்களைக் கெளரவிக்கும் வகையில் மொட்டை அடித்து கொண்ட வார்னர்... கோலிக்கு சாவல்!