இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் (கரோனா வைரஸ்) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்று ஒரேநாளில் 15 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, இதுவரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 129ஆக உயர்ந்துள்ளது.
இதைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள், வணிக வளாங்கள் மூடப்பட்டு வருகின்றன. மக்கள் கூட்டமான இடங்களுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டடுள்ளது.
இந்நிலையில் கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக மும்பையிலுள்ள பிசிசிஐ தலைமை அலுவலகம் மூடப்பட்டுள்ளது. மேலும் அறிவுப்பு வரும் வரை பிசிசிஐ அலுவலர்கள் அனைவரும் தங்களது வீட்டியிலிருந்து பணிபுரிமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, கோவிட்-19 வைரஸ் தொற்றால் ஐபிஎல் தொடர் மார்ச் 29ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா வைரஸால் 21 வயது கால்பந்து வீரர் உயிரிழப்பு