கோவிட்-19 பெருந்தொற்றால் இந்தியாவில் 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், மூன்றாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். இதனால் இந்தாண்டு நடைபெறவிருந்த 13ஆவது சீசன் ஐபிஎல் தொடரும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மினி ஐபிஎல் என அழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக்(டிஎன்பிஎல்) டி20 தொடரை ஒத்திவைப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், இத்தகவலை டிஎன்பிஎல் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளது.
-
🚨The 5th edition of TNPL tournament which was to start from 10th June, 2020, has been postponed.
— TNPL (@TNPremierLeague) May 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
For more ➡️ https://t.co/gy09BraZJc#TNPL2020 pic.twitter.com/lQFnD9Cde8
">🚨The 5th edition of TNPL tournament which was to start from 10th June, 2020, has been postponed.
— TNPL (@TNPremierLeague) May 18, 2020
For more ➡️ https://t.co/gy09BraZJc#TNPL2020 pic.twitter.com/lQFnD9Cde8🚨The 5th edition of TNPL tournament which was to start from 10th June, 2020, has been postponed.
— TNPL (@TNPremierLeague) May 18, 2020
For more ➡️ https://t.co/gy09BraZJc#TNPL2020 pic.twitter.com/lQFnD9Cde8
இந்த ட்விட்டர் பதிவில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இந்தாண்டு ஜூன் மாதம் தொடங்குவதாக இருந்த டிஎன்பிஎல் தொடரின் ஐந்தாவது சீசன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. இத்தொடருக்கான மாற்று தேதி அடுத்த அறிவிப்பில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க:'அவர் மீண்டும் அணிக்குத் திரும்புவது கடினமானது' - ரிக்கி பாண்டிங்!