ETV Bharat / sports

சர்ச்சையில் சிக்கும் கபில்தேவ் - தொடரும் கிரிக்கெட் சர்ச்சை! - பிசிசிஐ

டெல்லி: இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுத்த விவகாரத்தில் கபில்தேவ் தலைமையிலான மூவர் குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

kapil dev
author img

By

Published : Sep 29, 2019, 8:50 AM IST

இந்திய கிரிக்கெட் வாரியம் தற்சமயம் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் இந்திய அணியின் புதிய பயிற்சியாளாரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான கபில் தேவ், சாந்தா ரங்கசுவாமி, அன்ஷுமான் கெய்க்வாட் ஆகியோர் அடங்கிய குழுவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நியமித்தது.

இந்த குழு அணியின் பயிற்சியாளராக தற்போதுள்ள பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு செயல்படுவார் என அறிவித்திருந்தது. தற்போது கபில் தேவ் அடங்கிய குழுவின் மீது பிசிசிஐயின் நன்னெறி அலுவலர் டி.கே.ஜெயின், புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டது குறித்து அக்டோபர் 10ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். தற்போது இந்த விவகாரம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீது பூதாகரமாக வெடித்துள்ளது.

இதற்கு முன் தேசிய கிரிக்கெட் அகாடமி(என்.சி.ஏ) இயக்குநராகவுள்ள ராகுல் டிராவிட் மீது மத்திய பிரதேச கிரிக்கெட் கூட்டமைப்பின் வாழ்நாள் உறுப்பினரான சஞ்சீவ் குப்தா பிசிசிஐயின் விதிமுறைமீறல் வழக்கினை பதிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த விவகாரம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மீதும், அலுவலர்கள் மீதும் பல கேள்விக்கணைகளை எழுப்பியுள்ளது.

இதையும் படிங்க: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரியே தேர்வு!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.