ETV Bharat / sports

டி20 கிரிக்கெட்டில் மீண்டும் மிரட்ட வரும் ‘யுனிவர்ஸ் பாஸ்’ - உற்சாகத்தில் ரசிகர்கள் - வெஸ்ட் இண்டீஸ் அணி

டி20 கிரிக்கெட்டிற்கு பெயர்போன அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல், இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Chris Gayle, Fidel Edwards recalled to West Indies' T20I squad for Sri Lanka series

author img

By

Published : Feb 27, 2021, 5:10 PM IST

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது. இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (பிப்.27) அறிவித்துள்ளது.

இதில், டி20 கிரிக்கெட் போட்டிகளின் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்தார். அதற்கு முன்னதாக, 2019ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி உலகக்கோப்பை போட்டி முடிந்தவுடன் ஓய்வுபெறப் போவதாக கெயில் அறிவித்திருந்தார். அதன்பின், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இன்னும் தான் 2 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிவிட்டுதான் ஓய்வு பற்றிச் சிந்திப்பேன் எனத் தெரிவித்திருந்தார்.

இச்சூழலில் ஐபிஎல் டி20 போட்டியிலும், பாகிஸ்தான் டி20 லீக்கிலும் கிறிஸ் கெய்ல் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்ததையடுத்து, அவரை 2 ஆண்டுகளுக்குப் பின் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் மீண்டும் தேர்வு செய்துள்ளது.

மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணியில் மூத்த வேகப்பந்துவீச்சாளர் 39 வயதான பிடல் எட்வார்டஸும் ஏறக்குறைய 9 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியாவில் வரும் அக்டோபர் மாதத்தில் டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், அதற்கு தயாராகும் வகையில், வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

வெஸ்ட் இண்டீஸ் டி 20 அணி: பொல்லார்ட் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன், ஃபேபியன் ஆலன், டுவைன் பிராவோ, பிடல் எட்வர்ட்ஸ், ஆண்ட்ரே பிளெட்சர், கிறிஸ் கெய்ல், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், எவின் லூயிஸ், ஒபேட் மெக்காய், ரோவ்மன் பாவல், லென்டல் சிம்மன்ஸ் மற்றும் கெவின் சின்க்ளேர்.

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி: பொல்லார்ட் (கேப்டன்), ஷாய் ஹோப் , ஃபேபியன் ஆலன், டேரன் பிராவோ, ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், அல்சாரி ஜோசப், எவின் லூயிஸ், கைல் மேயர்ஸ், ஜேசன் முகமது, நிக்கோலஸ் பூரன், ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் கெவின் சின்க்ளேர்.

இதையும் படிங்க: பகலிரவு டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.