இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணியிடம் இழந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணியின் வீரர்கள் இரண்டு இன்னிங்ஸிலும் சொதப்பியதால் இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியது.
இதனிடையே இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 22ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. முதன்முறையாக இந்திய அணி பகல் - இரவு ஆட்டத்தில் விளையாடவுள்ளதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெருமளவு எழுந்துள்ளது.
இப்போட்டியில் பிங்க் நிற பந்துகளை இந்திய வீரர்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்திய வீரர் புஜாரா அது குறித்து ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், பிங்க் நிற பந்தை வைத்துக்கொண்டு பேட்டை வைத்து தட்டுகிறார். மேலும் அந்தப் படத்தோடு இப்போது அனைவரது கண்களும் இந்த பிங்க் பந்து மீது தான் என பதிவிட்டிருந்தார்.
-
All eyes on the #PinkBall now! 😉 pic.twitter.com/WoQIIaakZv
— cheteshwar pujara (@cheteshwar1) November 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">All eyes on the #PinkBall now! 😉 pic.twitter.com/WoQIIaakZv
— cheteshwar pujara (@cheteshwar1) November 17, 2019All eyes on the #PinkBall now! 😉 pic.twitter.com/WoQIIaakZv
— cheteshwar pujara (@cheteshwar1) November 17, 2019
நடுவரிசை வீரரான புஜாரா இந்திய அணியின் தூணாக உள்ளார். ஒவ்வொரு தொடரிலும் சதம், அரைசதம் அடிக்கும் இவர் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 54 ரன்கள் அடித்தார். கோலி தலைமையிலான இந்திய அணி நடப்பு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 300 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.