பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் இன்று (டிச.24) அகமதாபாத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் போது புதிய தேர்வு குழு நியமித்தல், பிசிசிஐயின் புதிய துணைத்தலைவரை நியமித்தல், ஐபிஎல் தொடரில் புதிதாக இரு அணிகளை இணைப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தின் முடிவில், 2022ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் புதிதாக இரு அணிகளை இணைப்பதற்கு பிசிசிஐ ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதேபோல் பிசிசிஐயின் துணைத்தலைவராக இருந்த மஹிம் வர்மாவுக்கு பதிலாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ் சுக்லா தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற தகவலும் வெளியாகியது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியை தேர்வு செய்யும் மூன்று பேர் அடங்கிய குழுவையும் பிசிசிஐ அறிவித்துள்ளது.
அதன்படி இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சேட்டன் சர்மா, அபே குருவில்லா, டெபாசிஸ் மொஹந்தி ஆகியோர் அடங்கிய மூன்று பேர் குழுவை பிசிசிஐ அறிவித்துள்ளது.
மேலும் இக்குழுவை பிசிசிஐயின் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவைச் சேரந்த மதன் லான், ஆர்பி சிங், சுலக்ஷனா நாயக் ஆகியோர் தேர்வு செய்துள்ளதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.
-
The Cricket Advisory Committee (CAC) comprising Mr Madan Lal, Mr Rudra Pratap Singh and Ms Sulakshana Naik met virtually to select three members of the All-India Senior Selection Committee (Men).
— BCCI (@BCCI) December 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The Cricket Advisory Committee (CAC) comprising Mr Madan Lal, Mr Rudra Pratap Singh and Ms Sulakshana Naik met virtually to select three members of the All-India Senior Selection Committee (Men).
— BCCI (@BCCI) December 24, 2020The Cricket Advisory Committee (CAC) comprising Mr Madan Lal, Mr Rudra Pratap Singh and Ms Sulakshana Naik met virtually to select three members of the All-India Senior Selection Committee (Men).
— BCCI (@BCCI) December 24, 2020
முன்னதாக இப்பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் பெயரும் இடம்பெற்றிருந்தது.
இருப்பினும் கிரிக்கெட் தேர்வுக் குழு பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட் போட்டி, ஐசிசி முடிவுக்கு பிசிசிஐ ஆதரவு?