ETV Bharat / sports

#TNPLFINAL: சொந்த மண்ணில் மரண மாஸ் காட்டிய சேப்பாக் சூப்பர் கில்லிஸ்!

author img

By

Published : Aug 15, 2019, 11:50 PM IST

Updated : Aug 16, 2019, 1:33 AM IST

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

#TNPLFINAL: சொந்த மண்ணில் மரண மாஸ் காட்டிய சேப்பாக் சூப்பர் கில்லிஸ்!

2019ஆம் ஆண்டுக்கான டி.என்.பி.எல் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், சேப்பாக் சூப்பர் கில்லிஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 126 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, உத்திரசாமி சசிதேவ் 44 ரன்கள் அடித்தார்.

இதைத்தொடர்ந்து, 127 ரன்கள் இலக்குடன் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்துவந்தது. குறிப்பாக, அந்த அணியின் கேப்டனும், ஓபனிங் பேட்ஸ்மேனுமான ஜெகதீசன் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து, வந்த சதுர்வேத், ஹரிநிஸாந்த் ஆகியோர் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பியதால் திண்டுக்கல் அணி 4 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது.

TNPL
சுமந் ஜெயின்

இந்த இக்கட்டான நிலையில் சுமத் ஜெயின், மோகன் அபிநவ் ஆகியோர் நிலையான ஆட்டத்தை கடைப்பிடித்து வந்தனர். இந்த ஜோடி 49 ரன்களை சேர்த்த நிலையில், மோகன் அபிநவ் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 24 ரன்கள் தேவைப்பட்ட போது, சுமந்த் ஜெயின் 46 ரன்களில் அவுட் ஆனது, ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

TNPL
விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் சேப்பாக் வீரர்கள்

இதையடுத்து, கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், முகமது, ராமலிங்கம், ஜெகநாதன் கவுசிக் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 114 ரன்களை மட்டுமே எடுத்தது. சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி தரப்பில் பெரியசாமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி இப்போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது.

Viral Advisory
Wednesday 14th August 2019.
Clients, please note the following addition to our output.
VIRAL (Soccer): Colombia's U-21 national championship saw a "Maradonian" goal when Norte de Santander's Anderson Diaz scored against Santander in the city of Barranquilla. Already moved.
Regards,
SNTV
Last Updated : Aug 16, 2019, 1:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.