இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (பிப்.13) தொடங்கி பிப்ரவரி 17ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் இளம் வீரர் சுப்மன் கில் களமிறங்கினர், இதில் சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் களமிறங்கிய புஜாராவும் 21 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் விராட் கோலியும் டக் அவுட்டாகி நடையைக் கட்டினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் சர்மா அரைசதம் கடந்து அணியை சரிவிலிருந்து மீட்டு வந்தார்.
அதன்பின் ரோஹித்துடன் இணைந்த அஜிங்கியா ரஹானே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தில் மிரட்டி வந்த ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது ஏழாவது சதத்தைப் பதிவு செய்தார்.
-
1⃣5⃣0⃣ up for Rohit Sharma!
— ICC (@ICC) February 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Can he convert this into a double century?#INDvENG | https://t.co/DSmqrU68EB pic.twitter.com/xXSweL4onG
">1⃣5⃣0⃣ up for Rohit Sharma!
— ICC (@ICC) February 13, 2021
Can he convert this into a double century?#INDvENG | https://t.co/DSmqrU68EB pic.twitter.com/xXSweL4onG1⃣5⃣0⃣ up for Rohit Sharma!
— ICC (@ICC) February 13, 2021
Can he convert this into a double century?#INDvENG | https://t.co/DSmqrU68EB pic.twitter.com/xXSweL4onG
அவருடன் இணைந்து விளையாடி வந்த ரஹானேவும் அரைசதம் கடக்க, இந்திய அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்தது. பின்னர் இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 161 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜேக் லீச் பந்துவீச்சில் மோயீன் அலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து 67 ரன்கள் எடுத்திருந்த துணை கேப்டன் ரஹானேவும், மோயீன் பந்துவீச்சில் ஆட்டமிழக்க 249 ரன்களுக்குள்ளாக இந்திய அணி ஐந்து விக்கெட்டுகளை மீண்டும் இழந்து தடுமாறியது.
-
Ajinkya Rahane brings up his 23rd Test fifty!
— ICC (@ICC) February 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
What a solid display of batting from the India batsman 👏#INDvENG | https://t.co/DSmqrU68EB pic.twitter.com/QalfQTn2Wt
">Ajinkya Rahane brings up his 23rd Test fifty!
— ICC (@ICC) February 13, 2021
What a solid display of batting from the India batsman 👏#INDvENG | https://t.co/DSmqrU68EB pic.twitter.com/QalfQTn2WtAjinkya Rahane brings up his 23rd Test fifty!
— ICC (@ICC) February 13, 2021
What a solid display of batting from the India batsman 👏#INDvENG | https://t.co/DSmqrU68EB pic.twitter.com/QalfQTn2Wt
பின்னர் ஆறாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் - ரவிச்சந்திரன் அஸ்வின் இணை எதிரணியின் பந்துவீச்சை பவுண்டரிகளாக மாற்றி, அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. பின்னர், எதிர்பாரத வகையில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஜோ ரூட் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன் மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் ரிஷப் பந்த் 33 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
-
England fought back with crucial strikes of Rohit Sharma and Ajinkya Rahane in the final session.
— ICC (@ICC) February 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
India finished day one on 300/6. What will be a good first-innings total for the hosts?#INDvENG | https://t.co/DSmqrU68EB pic.twitter.com/Z6ZMwMrMtM
">England fought back with crucial strikes of Rohit Sharma and Ajinkya Rahane in the final session.
— ICC (@ICC) February 13, 2021
India finished day one on 300/6. What will be a good first-innings total for the hosts?#INDvENG | https://t.co/DSmqrU68EB pic.twitter.com/Z6ZMwMrMtMEngland fought back with crucial strikes of Rohit Sharma and Ajinkya Rahane in the final session.
— ICC (@ICC) February 13, 2021
India finished day one on 300/6. What will be a good first-innings total for the hosts?#INDvENG | https://t.co/DSmqrU68EB pic.twitter.com/Z6ZMwMrMtM
இங்கிலாந்து அணி தரப்பில் ஜேக் லீச், மோயீன் அலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஓராண்டிற்கு பின்னர் மைதானங்களில் போட்டியைக் கண்டு ரசித்த ரசிகர்களுக்கு, இன்றைய ஆட்டம் விருந்தாக அமைந்தது. இதேபோல் அடுத்து வரும் நான்கு நாள் ஆட்டங்களும் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: பரபரப்பான ஆட்டத்தில் மெத்வதேவ் வெற்றி!