ETV Bharat / sports

கிரிக்கெட் வீரர்களுக்கு கண் பரிசோதனை: பெங்கால் கிரிக்கெட் சங்கம் முடிவு

கொல்கத்தா: கரோனா வைரஸ் சூழல் கட்டுக்குள் வந்தபின் பயிற்சி திரும்பும் வீரர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பெங்கால் கிரிக்கெட் சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

cab-to-make-eye-tests-mandatory-for-bengal-cricketers-post-lockdown

author img

By

Published : Jun 2, 2020, 8:46 PM IST

கரோனா வைரஸ் சூழலால் இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சிக்கு திரும்ப முடியாமல் உள்ளனர். இந்நிலையில் வீரர்கள் பயிற்சிக்கு திரும்பும்போது அனைவருக்கும் கண் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படும் என பெங்கால் கிரிக்கெட் சங்கம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெங்கால கிரிக்கெட் சங்கம் சார்பாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிர்வாக அலுவலர்கள் பேசுகையில், '’பயிற்சிக் குழுவில் எவ்வித மாற்றங்களும் இருக்காது. ஸ்பின்னர்களுக்கான பயிற்சி முகாம் 7 முதல் 10 நாள்கள் வரை நடக்கும். உள்ளூர் தொடர்களுக்கான வீரர்கள் தேர்வு பற்றி ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் பயிற்சியைத் தொடங்கும் தேதி முடிவு செய்யப்படவில்லை. கரோனா வைரஸ் சூழல் கட்டுக்குள் வந்தபின் பயிற்சிக்கு திரும்பும் வீரர்கள் அனைவருக்கும் கண் பரிசோதனை மேற்கொள்ளப்படும்'' என்றார்.

கிரிக்கெட் விளையாட்டிற்கு கை - கண்களின் ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியம் என்பதால் கண் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.