ETV Bharat / sports

பும்ரா - சஞ்சனா திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து! - சுரேஷ் ரெய்னா

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஜஸ்பிரித் பும்ரா, விளையாட்டுத் தொலைக்காட்சி தொகுப்பாளினி சஞ்சனா கணேசன் ஆகியோரது திருமணம் இன்று கோவாவில் நடைபெற்றது.

Bumrah-Sanjana tie the knot: Kohli, Raina and other cricketers congratulate newlyweds

author img

By

Published : Mar 15, 2021, 7:23 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்பவர் ஜஸ்பிரித் பும்ரா. இவர் இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜஸ்பிரித் பும்ரா தனியார் விளையாட்டுத் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியான சஞ்சனா கணேசனுடன் இன்று திருமணம் செய்துகொண்டார். கோவாவில் நடைபெற்ற இத்திருமண விழாவில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர்.

திருமணம் குறித்து பும்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், "அன்பினால் வழிநடத்தப்பட்ட நாங்கள் ஒன்றாக ஒரு புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளோம். இன்று எங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாள்களில் ஒன்றாகும்.

மேலும் எங்கள் திருமணச் செய்திகளையும்; மகிழ்ச்சியையும் உங்களுடன் பகிர்ந்துகொண்டதை நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாய் உணர்கிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.

பும்ரா - சஞ்சனா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து
பும்ரா - சஞ்சனா திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து

இதையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா மற்றும் ஐசிசி, பிசிசிஐ, மும்பை இந்தியன்ஸ் அணி ஆகியவையும் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளன.

பிசிசிஐயின் ட்விட்டர் பதிவில், "உங்களது இந்த அழகான பயணத்தின் தொடக்கத்திற்கு எங்களுடைய வாழ்த்துகள். நீங்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தார் ஓபன்: 4ஆவது முறையாகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய பசிலாஷ்விலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.