ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றிபெற்றது. இந்த போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, டி20 போட்டிகளில் பேட்டிங்கின் போது எந்த அளவிற்கு முதல் 6 ஓவர்களில் ரன்கள் எடுப்பது முக்கியமோ, அதே அளவிற்கு பந்துவீச்சில் கடைசி நான்கு ஓவர்கள் மிகவும் முக்கியம்.
அதில் ஆஸ்திரேலிய அணி சிறந்த பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ளது. எங்கள் அணியில் மிட்சல் ஸ்டார்க் அனைத்துவிதமான போட்டிகளிலும் சிறந்தவர் என நிரூபித்துள்ளார். ஆனால் இறுதி ஓவர்களில் பந்துவீசுவதற்கு இந்தியாவின் பும்ரா ஒரு பெஞ்ச்மார்க்கை உருவாக்கியுள்ளார் என புகழ்ந்துள்ளார்.
ஆஸ்திரேலிய கேப்டன் ஒருவர் இந்திய வேகபந்துவீச்சாளரை பாராட்டுவது அரிதினும் அரிதான விஷயம் என்பதால், இந்திய ரசிகர்களால் இந்த சம்பவம் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிக்கலாமே: முதல் டி20: வார்னர் சதம், 134 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை படுதோல்வி