ETV Bharat / sports

ரஹானேவின் கேப்டன்சியை பாராட்டிய பிராட் ஹாடின்!

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்தின் வரிசையை மாற்றி களமிறங்கிய ரஹானேவின் கேப்டன்சி பாராட்டுக்குரியது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் தெரிவித்துள்ளார்.

Brad Haddin praises Rahane's "outstanding" captaincy

author img

By

Published : Jan 12, 2021, 10:25 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது ஹனுமா விஹாரியின் இடத்தில் ரிஷப் பந்த் களமிறங்கி அதிரடி ஆட்டத்தில் எதிரணி பந்துவீச்சாளர்களைத் திணரடித்தார்.

இதில் ரிஷப் பந்த் 97 ரன்களை எடுத்தும் அசத்தினார். இந்நிலையில் சரியான நேரத்தில் ரிஷப் பந்த்தின் வரிசையை மாற்றி ரஹானே தனது கேப்டன்சி திறனை வெளிப்படுத்தியுள்ளார் என அஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசிய பிராட் ஹாடின், “நேற்று (ஜன.11) இந்தியா விளையாடி விதத்தைப் பார்த்தால் முதலிருந்தே ஆட்டத்தை டிராவில் முடிப்பதற்கு விளையாடியிருக்க முடியும். ஆனால் ரிஷப் பந்தின் பேட்டிங் வரிசையை மாற்றி ரஹானே தனது சிறப்பான கேப்டன்ஷியை வெளிப்படுத்தியிருந்தார்.

நீங்கள் ரஹானேவின் கேப்டன்ஷியை உன்னிப்பாகக் கவனித்திருந்தால், அவர் போட்டியில் வெற்றி பெறுவதற்காக ரிஷப் பந்த்தை முன்னதாகவே அனுப்பியது தெரியவரும். ரிஷப் பந்த்தும் தனது வேலையை சிறப்பாகவே செய்திருந்தார்.

அதிரடியில் மிரட்டிய ரிஷப் பந்த்
அதிரடியில் மிரட்டிய ரிஷப் பந்த்

அவர் தைரியமாக விளையாடியதைப் பார்பதற்கு அருமையாக இருந்தது. பின்னர் டிம் பெய்ன் கேப்டனாக சில முடிவுகளை செய்தார். அதன் பயணாக ரிஷப் பந்த்தும் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த விஹாரியின் ஆட்டத்தைப் பர்த்தபோது, புஜாராவின் பிரதிபிம்பம் போல் இருந்தது.

நேற்றையப் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவும் என எதிர்பார்த்தேன். ஆனால் ரஹானேவின் அபார கேப்டன்சி இந்திய அணியைத் தோல்வியிலிருந்து மீட்டுள்ளது.

ஏனெனில் அணி வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டுள்ளனர். தங்களது கேப்டன் அணியில் இல்லை. மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் தொடரிலிருந்து விலகியுள்ளனர். ஜடேஜா தனது காயத்தையும் பொருட்படுத்தாமல் பேட்டிங் செய்ய தயாரானார். இது இந்திய அணி தன்மையை நம்மிடம் காட்டியுள்ளது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன் தகுதிச்சுற்று: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அங்கிதா ரெய்னா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.