ETV Bharat / sports

'பாக்ஸிங் டே தொடர் குறித்து முடிவெடுக்க அதிக நேரம் உள்ளது' - ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்

விக்டோரியா மாகாணத்தில் கரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் தொடர் குறித்து முடிவெடுக்க அதிக நேரம் இருப்பதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

boxing-day-test-to-stay-at-mcg-if-crowd-can-come-says-ca-chief-executive

author img

By

Published : Aug 8, 2020, 4:29 PM IST

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனால் அங்குள்ள மெல்பர்ன் நகரில் இந்தாண்டு நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் தற்போது பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 'பாக்ஸிங் டே' டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, அந்த டெஸ்ட் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரிய தரப்பில் கூறுகையில், "மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பார்வையாளர்கள் இடம்பெற்ற பின், டெஸ்ட் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது அதனைப் பற்றி யோசிக்க போதுமான நேரம் உள்ளது.

நிலைமையைச் சீராக்கும் முயற்சியில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதுகுறித்து பிசிசிஐயிடமும், ஆஸ்திரேலியா அரசிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருகிறது. விரர்கள், பார்வையாளர்களின் ஆரோக்கியத்தில் முழுக் கவனமும் செலுத்தப்பட்டுவருகிறது. ஒருவேளை மெல்போர்னில் கிரிக்கெட் போட்டியை நடத்த முடியாத சூழல் உருவானால், அதற்கான மாற்று ஏற்பாடுகளுக்கும் தயார் நிலையில் இருக்கின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.