தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட், மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இந்நிலையில், பாக்ஸிங் டே நாளான இன்று இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, தென் ஆப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் டீன் எல்கர் இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே பட்லரிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, 23 பந்துகளில் நான்கு பவுண்டரி உள்பட 20 ரன்கள் அடித்து ஒருநாள் போட்டி போல விளையாடிய ஏய்டன் மார்க்ரம் சாம் கரண் பந்துவீச்சில் நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து, நிதானமாக விளையாடி வந்த ஸூபாயர் ஹம்சா 39 ரன்களிலும், டூ பிளசிஸ் 29 ரன்களிலும் டுவான் டர் டுசேன் ஆறு ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்க ஐந்து விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை எடுத்திருந்தது.
இந்த இக்கட்டான நிலையில், களத்திலிருந்த டி காக், டுவைன் ரேடோரியஸுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்த ஜோடி 87 ரன்களைச் சேர்த்த நிலையில், ரோடோரியஸ் 33 ரன்களில் வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடிய டி காக் இப்போட்டியில் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 95 ரன்களுக்கு சாம் கரண் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில், 14 பவுண்டரிகள் அடங்கும். இதையடுத்து, கேஷவ் மஹராஜ் ஆறு ரன்களில் அவுட்டாக அவரைத் தொடர்ந்து வந்த ரபாடா, வெர்னான் ஃபிலாண்டருடன் ஜோடி சேர்ந்தார்.
-
A great day of Boxing Day Test cricket.
— ICC (@ICC) December 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
South Africa end it on 277/9 – who do you think is on top? pic.twitter.com/zgHOTCz1yA
">A great day of Boxing Day Test cricket.
— ICC (@ICC) December 26, 2019
South Africa end it on 277/9 – who do you think is on top? pic.twitter.com/zgHOTCz1yAA great day of Boxing Day Test cricket.
— ICC (@ICC) December 26, 2019
South Africa end it on 277/9 – who do you think is on top? pic.twitter.com/zgHOTCz1yA
இருவரும் நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்துவந்த நிலையில், ராபாடா 12 ரன்களில் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தபோது முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 82.4 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்களை எடுத்துள்ளது. ஃபிலாண்டர் 28 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இங்கிலாந்து அணி தரப்பில் சாம் கரண் நான்கு, பிராட் மூன்று, ஆர்ச்சர், ஆண்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
இதையும் படிங்க: டெஸ்ட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் வரிசையில் ஸ்மித்