இங்கிலாந்து காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த நாள் நடைபெறும் விளையாட்டு போட்டி பாக்ஸிங் டே போட்டியாக கருதப்படுகிறது.
![Boxing day test](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5504743_jsar.jpg)
குறிப்பாக, இந்த பாக்ஸிங் டே தினமன்று ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகள் தங்களது சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது வழக்கம். அந்தவகையில், நேற்று ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னிலும் அதேபோல, தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனிலும் தொடங்கியது.
![Boxing day test](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5504743_dsa.jpg)
முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி முதல்நாள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 257 ரன்களை எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் 77 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 25 ரன்களுடனும் நாட்அவுட் பேட்ஸ்மேன்களாக களத்தில் உள்ளனர். இதேபோல், செஞ்சுரியனில் நடைபெற்றுவரும் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடிவரும் தென் ஆப்பிரிக்க அணி ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தபோது முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
-
The Kiwis got the ball talking in the first session! #AUSvNZ pic.twitter.com/WbrDmxbwUz
— cricket.com.au (@cricketcomau) December 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The Kiwis got the ball talking in the first session! #AUSvNZ pic.twitter.com/WbrDmxbwUz
— cricket.com.au (@cricketcomau) December 26, 2019The Kiwis got the ball talking in the first session! #AUSvNZ pic.twitter.com/WbrDmxbwUz
— cricket.com.au (@cricketcomau) December 26, 2019
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியைத் தவிர்த்து இந்த இரண்டு போட்டிகளையும் இணைக்கும் வகையில் ஒரு ஒற்றுமை உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான ஜோ பர்ன்ஸ் தனது முதல் பந்திலேயே போல்ட் பந்துவீச்சில் க்ளின் போல்டானார். இதனால், ஆஸ்திரேலிய அணி முதல் ஓவரின் நான்காவது பந்திலேயே ஒரு ரன்னுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது.
![Boxing day test](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5504743_d.jpg)
ஜோ பர்ன்ஸாவது தனது முதல் பந்தில்தான் ஆட்டமிழந்தார். ஆனால், செஞ்சுரியனில் நடைபெற்றுவரும் போட்டியின் முதல் பந்திலேயே தென் ஆப்பிரிக்க அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான டீன் எல்கர் அவுட்டானார். ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய பந்தில் அவர் பட்லரிடம் கேட்ச் தந்து டக் அவுட்டானார். இதன்மூலம், இந்த இரண்டு பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளும் விக்கெட்டுகளுடன் தொடங்கியது.
இதையும் படிங்க: சதத்தை நழுவவிட்ட டி காக்: சொந்த மண்ணில் தடுமாறும் தென் ஆப்பிரிக்கா