ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், பெர்த்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் (பாக்ஸிங் டே) போட்டி நாளை மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் விளையாடும் நியூசிலாந்து அணியில் இரண்டு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட், லோக்கி ஃபெர்குசனுக்கு பதிலாக இடம்பெற்றுள்ளார். அதேபோல, தொடக்க வீரர் ஜீட் ராவலுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் டாம் பிளண்டல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வழக்கமாக ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டியில் மூன்று பந்துவீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர் என பவுலிங்கில் நான்கு வீரர்களுடன்தான் களமிறங்கும். ஆனால், இம்முறை ஐந்து பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டிம் பெய்ன் கூறுகையில்,
-
'We've probably got two different teams to be honest' 🤔 #AUSvNZ pic.twitter.com/GjjMzqTroS
— cricket.com.au (@cricketcomau) December 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">'We've probably got two different teams to be honest' 🤔 #AUSvNZ pic.twitter.com/GjjMzqTroS
— cricket.com.au (@cricketcomau) December 25, 2019'We've probably got two different teams to be honest' 🤔 #AUSvNZ pic.twitter.com/GjjMzqTroS
— cricket.com.au (@cricketcomau) December 25, 2019
"மெல்போர்னில் நடந்த இரண்டு பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளிலும் 20 விக்கெட்டுகள் வீழ்த்துவது சற்று கடினமாக இருந்தது. இதனால், இந்த ஆடுகளம் பந்துவீச்சுக்கு உதவுமா என்று தெரியவில்லை. ஆனால் எதுவாக இருந்தாலும், இப்போட்டிக்கு நாங்கள் இரண்டு திட்டங்களை (பந்து வீச்சாளர்கள் அல்லது நான்கு பந்துவீச்சாளர்கள் ) வைத்துள்ளோம்.
ஒருவேளை இப்போட்டிக்கு ஒரு பந்துவீச்சாளர் தேவை என்ற பட்சத்தில் ஐந்து பந்துவீச்சாளருடன் களமிறங்குவோம். இல்லையெனில் வழக்கம்போல நான்கு பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவோம். எதுவாக இருந்தாலும், எங்களது இறுதிமுடிவை நாளை அறிவிப்போம்" என்றார்.
ஆஸ்திரேலிய அணி கடந்த 10 ஆண்டுகளில் ஒரேயொரு முறை 2013இல் இலங்கை அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஐந்து பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது. ஒருவேளை நாளைய போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி ஐந்து பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும்பட்சத்தில், டிராவிஸ் ஹெட்டிற்கு பதிலாக ஆல்ரவுண்டர் மைக்கேல் நேசர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவார் என தெரிகிறது.
ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், ஜோ பர்ன்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசக்னே, மேத்யூ வேட், டிராவிஸ் ஹெட் அல்லது மைக்கேல் நேசர், டிம் பெய்ன் (கேப்டன்), பெட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், நாதன் லயான், ஜேம்ஸ் பெட்டின்சன்
நியூசிலாந்து அணி: டாம் லதாம், டாம் பிளண்டல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), டெய்லர், ஹென்ரி நிக்கோலஸ், பி.ஜே. வாட்லிங், காலின் டி கிராண்ட்ஹோம், மிட்சல் சாண்ட்னர், டிம் சவுதி, நீல் வாக்னர், டிரென்ட் போல்ட்
இதையும் படிங்க: இவர்தான் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்" - ஆஸ்திரேலிய கேப்டன் !