பிக் பாஷ் டி20 தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் அடிலெயிட் ஸ்ட்ரைக்கர்ஸ் - சிட்னி தண்டர்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிட்னி தண்டர்ஸ் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக காலெம் ஃபெர்குசன் 73 ரன்கள் அடித்தார். அடிலெயிட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தரப்பில் பீட்டர் சிடில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, 169 ரன்கள் இலக்குடன் விளையாடிய அடிலெயிட் அணி 15.5 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களை மட்டுமே எடுத்திருந்தன. இதனால் அடிலெயிட் ஸ்ட்ரைக்கல்ஸ் அணியின் வெற்றிக்கு 25 பந்துகளில் 50 ரன்கள் தேவைப்பட்டன. அதிரடி ஆட்டக்காரர்கள் அனைவரும் ஆட்டமிழக்க, களத்தில் ரஷித் கான், பீட்டர் சிடில் இருவரும் இருந்ததால், சிட்னி தண்டர்ஸ் அணி லாவகமாக வெற்றிபெறும் என ரசிகர்கள் நினைத்தனர்.
-
The great man Rashid Khan hitting a six on his backside 😂 #BBL09 pic.twitter.com/YAEoWlc2vq
— cricket.com.au (@cricketcomau) December 31, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The great man Rashid Khan hitting a six on his backside 😂 #BBL09 pic.twitter.com/YAEoWlc2vq
— cricket.com.au (@cricketcomau) December 31, 2019The great man Rashid Khan hitting a six on his backside 😂 #BBL09 pic.twitter.com/YAEoWlc2vq
— cricket.com.au (@cricketcomau) December 31, 2019
ஆனால், களத்திலிருந்த ரஷித் கான் தனது கேமல் பேட்டால் 360 டிகிரி கோணத்திலும் பவுண்ரிகளும், சிக்சர்களுமாக விளாசி ஸ்கோரை உயர்த்தினார். இதையடுத்து, அடிலெயிட் அணி இரண்டு ஓவர்களில் 31 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலையில், டேனியல் சாம்ஸ் வீசிய 19ஆவது ஓவரில் ரஷித் கான் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் என 17 ரன்களை சேர்த்தார்.
குறிப்பாக, அந்த ஓவரின் கடைசி பந்தை ரஷித் கான் ஆஃப் சைட் பக்கம் நகர்ந்து வந்து லெக் சைடில் ஸ்வீப் ஷாட் அடிக்க பந்து பவுண்டரிக்கு சென்றது. ரஷித் கானின் இந்த ஷாட்டைக் கண்டு டேனியல் சாம்ஸின் ரியாக்ஷன் சமூக வலைதளங்கில் வைரலானது.
-
We can't stop watching this shot from Rashid Khan... 🤯🤯
— KFC Big Bash League (@BBL) December 31, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Daniel Sams' reaction 😂 #BBL09 pic.twitter.com/9Agu5OMqcj
">We can't stop watching this shot from Rashid Khan... 🤯🤯
— KFC Big Bash League (@BBL) December 31, 2019
Daniel Sams' reaction 😂 #BBL09 pic.twitter.com/9Agu5OMqcjWe can't stop watching this shot from Rashid Khan... 🤯🤯
— KFC Big Bash League (@BBL) December 31, 2019
Daniel Sams' reaction 😂 #BBL09 pic.twitter.com/9Agu5OMqcj
இதையடுத்து, கடைசி நான்கு பந்துகளில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில், மோரிஸ் வீசிய மூன்றாவது நான்காவது பந்தை ரஷித் கான் ஃபைன் லைக் திசையிலும், பாயிண்ட் திசையிலும் மிரட்டலாக பவுண்டரி அடித்தார். இதனால், அடிலெயிட் அணியின் வெற்றிக்கு இரண்டு பந்துகளில் ஐந்து ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரஷித் கான் இரண்டாவது ரன் ஓடும்போது ரன் அவுட்டானார்.
18 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர், நான்கு பவுண்டரி, மூன்று சிக்சர் என 40 ரன்களை விளாசி ரசிகர்களை குதுகலப்படுத்தினார். இறுதியில், அடிலெயிட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி இப்போட்டியில் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இருப்பினும், ரஷித் கான் ஆடிய ஒவ்வொரு ஷாட்டும் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டி வில்லியர்ஸை போலவே இருந்ததாக நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 2019 கிரிக்கெட்: சாதனைகளும்... வேதனைகளும்...!