ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 தொடரின் ஒன்பதாவது சீசனுக்கான இரண்டாவது லீக் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் - பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதின. சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் ஃபீல்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெர்த் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன்குவிப்பில் தடுமாறியது. இறுதியில், 20 ஓவர்களின் முடிவில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக, கமேரோன் க்ரீன் 36, கேப்டன் மிட்சல் மார்ஷ் 32 ரன்கள் அடித்தனர். சிட்னி சிக்சர்ஸ் அணி தரப்பில் டாம் கரன் மூன்று, பென் மனென்டி (Ben Manenti), பென் வார்ஷூய்ஸ் (Ben Dwarshuis) ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து, 132 ரன்கள் இலக்குடன் களமறிங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோஷ் ஃபிலப் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார்.
-
It's on the roof!!
— KFC Big Bash League (@BBL) December 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Josh Philippe ends this one in STYLE. The @SixersBBL win 😎 #BBL09 pic.twitter.com/RL1EAOu7Jb
">It's on the roof!!
— KFC Big Bash League (@BBL) December 18, 2019
Josh Philippe ends this one in STYLE. The @SixersBBL win 😎 #BBL09 pic.twitter.com/RL1EAOu7JbIt's on the roof!!
— KFC Big Bash League (@BBL) December 18, 2019
Josh Philippe ends this one in STYLE. The @SixersBBL win 😎 #BBL09 pic.twitter.com/RL1EAOu7Jb
மறுமுனையில், அவருக்கு உறுதுணையாக விளையாடி வந்த டேனியல் ஹியூஸ் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஜேம்ஸ் வின்ஸ் 13 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபக்கம் ஜோஷ் ஃபிலிப் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்தார். இதனால், சிட்னி சிக்சர்ஸ் அணியின் வெற்றிக்கு 31 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், ஜோஷ் ஃபிலிப் சிக்சர் அடித்து ஆட்டத்தை ஃபினிஷ் செய்தார்.
இதன் மூலம், சிட்னி சிக்சர்ஸ் அணி 15 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 137 ரன்களை எடுத்து அந்த அணி இப்போட்டியில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் 44 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் என 81 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சிட்னி சிக்சர்ஸ் வீரர் ஜோஷ் ஃபிலிப் ஆட்டநாயன் விருதைப் பெற்றார்.
நாளை ஜிலாங்க் நகரில் நடைபெறவுள்ள மூன்றாவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி, சிட்னி தண்டர்ஸ் அணியுடன் மோதவுள்ளது.
இதையும் படிங்க: கடைசி பந்தில் 5ரன்கள் தேவை... வெச்சுக்கோ சிக்ஸ்... ஆஸி. வீராங்கனையின் நச் ஃபினிஷ்!