ETV Bharat / sports

'பிங்க்' பாலை விடுங்க... அதுக்கு முன்னாடி இதையெல்லாம் சரி பன்னுங்க - டிராவிட் - Rahul Dravid about D/N Test

இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் மேம்பட பகலிரவு டெஸ்ட் போட்டி மட்டுமே நிரந்திர தீர்வு கிடையாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

Dravid
author img

By

Published : Nov 19, 2019, 9:53 PM IST

டி20 போட்டியின் வருகைக்குப் பிறகு இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான முக்கியத்துவம் ரசிகர்கள் மத்தியில் குறைந்துகொண்டே இருக்கிறது. சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியைப் பார்க்க 1,500 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகின. இந்தச் சூழலில், இந்தியா - வங்கதசே அணிகளுக்கு இடையிலான பிங்க் பால் (பகலிரவு டெஸ்ட் ) போட்டி வரும் 22ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது.

இவ்விரு அணிகளும் முதன்முறையாக பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளன. இப்போட்டியின் முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையாகின. வரலாற்று சிறப்பு மிக்க இப்போட்டியைப் பார்க்க ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளதால், இப்போட்டியைக் காண ரசிகர்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய தேசிய கிரிக்கெட் அகாடெமியின் தலைவருமான டிராவிட் கூறுகையில்,

Dravid
டிராவிட்

"ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க இந்த பிங்க் பால் (பகலிரவு டெஸ்ட்) போட்டி ஒரு புதுமையான முயற்சியாக இருக்கும். அதேசமயம், இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டை மேம்படுத்த இது மட்டுமே ஒரே தீர்வு கிடையாது. அதற்கு முன் நாம் சரி செய்ய வேண்டிய ஏராளமான விஷயங்கள் உள்ளன.

2001இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஈடன் கார்டனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியைப் பார்க்க ஒரு லட்ச ரசிகர்கள் மைதானத்துக்கு வருகைத் தந்திருனர். அப்போது கிரிக்கெட்டை பார்க்க HD டிவி, ஸ்மார்ட் ஃபோன் போன்ற தொழில்நுட்பங்கள் கிடையாது. இதனால், போட்டியின் அனுபவங்களை பெற ரசிகர்கள் மைதானத்துக்கு வருகைத் தந்தனர். ஆனால், தற்போது எல்லாமே மாறிவிட்டதால் டெஸ்ட் போட்டியைப் பார்க்க அவ்வளவாக ரசிகர்கள் வருகை தருவதில்லை என்ற ஒற்றுமையை நாம் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.

ஆஷஸ், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கு எல்லாம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது என்று விவாதிக்கலாம். ஆனால், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் டெஸ்ட் போட்டிக்கான கால அட்டவணை என ஒன்று இருக்கும். ஆனால், நமக்கு அது கிடையாது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்று டெஸ்ட் போட்டிகளுக்கான அட்டவணையை நாமும் பின்பற்ற வேண்டும். மேலும், மைதானத்தில் போட்டியைப் பார்க்க வரும் ரசிகர்களுக்கு நல்ல வசதிகளை செய்துதர வேண்டும்'' என்றார்.

முன்னதாக, இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே புனேவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கூரை இல்லாததால், கடும் வெயிலில் தாங்கள் இருக்கைகளில் உட்கார்ந்து போட்டியைப் பார்த்தோம் என ரசிகர்கள் குற்றம் சாட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.