தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடிவருகின்றது. இவ்விரு அணிகளுக்கிடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று ஜோகனஸ்பர்க்கில் நேற்று தொடங்கியது.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்து விளையாடிவருகின்றது. இதில் மூன்றாம்நிலை வீரராகக் களமிறங்கிய ஸ்டோக்ஸ், அன்ரீஜ் நோர்டிச் பந்துவீச்சில் இரண்டு ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது அவர் டக் அவுட்டிற்கு சென்றுகொண்டிருக்கும்போது தன்னைப்பற்றி விமர்சனம்செய்த ரசிகர் ஒருவரை ஆபாச வார்த்தைகளினால் திட்டியுள்ளார்.
இது அங்கிருந்த கண்காணிப்பு ஒளிப்படக் கருவியில் பதிவானதால், ஸ்டோக்ஸின் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனையடுத்து தான்செய்த தவறுக்கு மன்னிப்புக்கோரும்விதத்தில் ஸ்டோக்ஸ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த ரசிகரிடம் தனது மன்னிப்பைக் கேட்டுள்ளார்.
ஸ்டோக்ஸ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் ஆட்டமிழந்த பிறகு அந்த ரசிகரை திட்டியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மேலும், நான் ஆட்டமிழந்த பிறகு மைதானத்தை விட்டு வெளியேறும்போது, கூட்டத்திலிருந்து பலமுறை அசிங்கப்படுத்தப்பட்டுள்ளேன்.
மேலும் எனது இந்தச் செயலானது எனது ஆட்டத்தின் மீதான செயல் அல்ல என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். நான் பயன்படுத்திய மொழிக்கு நான் உண்மையிலேயே மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக உலகெங்கிலும் நேரடி ஒளிபரப்பைப் பார்க்கும் பல இளம் ரசிகர்களிடம் இந்த மன்னிப்பை கேட்க விரும்புகிறேன்.
இதுவரை நடந்த டெஸ்ட் போட்டிகளில் இரு நாட்டு ரசிகர்களின் ஆதரவும் எனக்கு இருந்தது. இச்சம்பவத்திற்குப் பிறகும் அந்த அன்பு அவர்களிடையே தொடரும் என நான் எதிர்பார்க்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- — Ben Stokes (@benstokes38) January 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Ben Stokes (@benstokes38) January 24, 2020
">— Ben Stokes (@benstokes38) January 24, 2020
இதையடுத்து இங்கிலாந்தின் உலகக்கோப்பை நட்சத்திரமான ஸ்டோக்ஸ் இச்சம்பவத்திற்காக ஐசிசியின் ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ளக்கூடும். ஏனெனில் இது ஐ.சி.சி.யின் நடத்தைவிதிகளின்படி மைதானத்திலிருக்கு ரசிகரை திட்டுவது குற்றமாகும்.
இதையும் படிங்க: சோயப் மாலிக்கின் மெர்சல் கம்பேக்... தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான்