ETV Bharat / sports

ஈரத்தைப் போக்க வேக்யூம் கிளீனரா? - கியூரேட்டரின் அறிக்கைக்காக காத்திருக்கும் பிசிசிஐ - கவுகாத்தி

இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று ரத்து செய்யப்பட்டதை விட, பிட்ச்சில் உள்ள ஈரத்தன்மையைக் குறைக்க மைதான அலுவலர்கள் எடுத்த நடவடிக்கைதான் இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

bcci-unimpressed-after-leaking-covers-see-umpires-call-off-guwahati-t20i

author img

By

Published : Jan 6, 2020, 7:39 PM IST

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கவுகாத்தி பரஸ்பரா மைதானத்தில் நேற்று நடக்கவிருந்தது. டாஸ் போட்ட பின் பெய்த மழையால் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் ரத்து செய்யப்பட்டது. பிட்ச்சில் ஏற்பட்ட ஈரம், காயாமல் இருந்ததால்தான் ரசிகர்களின் ஏமாற்றத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பிசிசிஐ அலுவலர்கள் பேசுகையில், "ஹேர் ட்ரையரையும் வேக்யூம் கிளீனரையும் பயன்படுத்தி பிட்ச்சை உலர்த்துவதைக் கண்டு யாராக இருந்தாலும் அதிர்ச்சிதான் கொள்வார்கள். இதனால் மைதான ஊழியர்களின் செயல்பாடுகள் பிசிசிஐக்கு அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் தலைமை கியூரேட் ஆஷிஷ் போவ்மிக்கின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.

ஹேர் ட்ரையர் மூலம் பிட்ச்-ஐ உலர்த்தும் மைதான ஊழியர்கள்
ஹேர் ட்ரையர் மூலம் பிட்ச்சை உலர்த்தும் மைதான ஊழியர்கள்

லோதா கமிட்டியின் வரவுக்குப் பிறகு, மாநில கிரிக்கெட் சங்கங்கள் அனைத்துக்கும் தொடர்ச்சியாகத் திட்டமிடுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதேபோல் அலுவலர்களின் வயதும் அனுபவமின்மையும் நேற்று நடந்த சம்பவங்களுக்கு முக்கியக் காரணம்.

எந்தவொரு கிரிக்கெட் சங்கத்திற்கும் தங்களுக்கு தேவையானவற்றைக் கேட்பதற்கு கூட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிசிசிஐயின் கியூரேட்டரிடமும் தலைமை நிர்வாக அலுவலரிடமும் நிறைய குற்றச்சாட்டுகள் உள்ளன என்று நான் நினைக்கிறேன். அடிப்படைகள் சரியான முறையில் இருப்பதை உறுதிசெய்வதற்கான தொலைநோக்குப் பார்வை வேண்டும்" என்றார்.

பிட்சி-ஐ பார்வையிட்ட இந்திய வீரர்கள்
பிட்சி-ஐ பார்வையிட்ட இந்திய வீரர்கள்

மற்றொரு அலுவலர் கூறுகையில், "பிசிசிஐ தலைவர் கங்குலி தலைமையில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களிடையே மென்மையான செயல்முறையை உறுதிப்படுத்தி, நடவடிக்கைகளை எடுப்பார் என்று நம்புகிறோம். இதனால் ரசிகர்கள் வேறு எந்தப் போட்டியின்போதும் சிரமத்திற்கு ஆளாக மாட்டார்கள்" என்றார்.

இதையும் படிங்க: ETV ETV ETV 11 வருடங்களுக்குப் பிறகு ஃபிளெமிங் சாதனையை முறியடித்த டெய்லர்

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.