நியூசிலாந்திற்கு இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளன. அதில் மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இதற்கான இந்திய அணி ஜனவரி 12ஆம் தேதி தேர்வு செய்யப்படவுள்ளது. இதே நாளில் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள மகளிர் டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியும் தேர்வு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
இதேபோல் இந்திய ஆடவர் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, மூன்று ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணியும் ஜனவரி 12ஆம் தேதியே அறிவிக்கப்படவுள்ளது.
இதற்கு முன்னதாக நியூசிலாந்திற்கு நாளை பயணம் செய்யவுள்ள இந்திய ஏ அணியில் சுப்மன் கில், புஜாரா, ரஹானே, சஹா, விஹாரி, நதீம், அஷ்வின், மயாங்க் அகர்வால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நியூசிலாந்து தொடருக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது.
இதையும் படிங்க: பந்துவீச்சு சர்ச்சையில் சிக்கிய கொல்கத்தாவின் புதிய வரவு