ETV Bharat / sports

'ஐபிஎல் தொடரை நடத்துவதில் மட்டுமே கவனம்' - பிசிசிஐ

ஜபிஎல் போட்டியை நடத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துவதாக பிசிசிஐ அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

BCCI focussed on successful hosting of IPL, not ticket revenue

author img

By

Published : Jul 25, 2020, 9:07 PM IST

இந்தாண்டு நடைபெறவிருந்த உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ரத்து என ஐசிசி அறிவித்தவுடனே, ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான பணிகளில் பிசிசிஐ களமிறங்கியது.

இதையடுத்து ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8ஆம் தேதிவரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ அலுவலர் கூறுகையில், 'இந்தாண்டு ஐபிஎல் தொடரை நடத்துவதில் மட்டுமே பிசிசிஐ முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது. ஆனால் போட்டிகள் பார்வையாளர்களின்றி நடைபெறும் என்பதால் அணியின் உரிமையாளர்கள் பெரும் இழப்பை சந்திக்கும் வாய்ப்பும் உள்ளது.

மேலும் டிக்கெட் வருவாயினை தவிர்ப்பதால் அணியின் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடையமாட்டார்கள். அதேசமயம் பிசிசிஐயும் போட்டியை காண ரசிகர்கள் வருவதை விரும்புகிறது. ஆனால் தற்போதுள்ள சூழலில் நாங்கள் ரசிகர்களின் நலனில் அக்கறை செலுத்தவேண்டியுள்ளது.

இந்தாண்டு ஐபிஎல் தொடர் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து முயற்சிகளையும் பிசிசிஐ எடுத்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் நாங்கள் ஒருபோதும் டிக்கெட் வருவாய் குறித்த ஆலோசித்தது இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.