ETV Bharat / sports

கைவிடப்பட்ட பிக் பாஷ் போட்டி; காரணம் மழையல்ல புகை! - Big Bash League 2019- 20

கான்பரா: காற்று மாசு, பனிப்புகை ஆகியவற்றின் காரணமாக அடிலெயிட் ஸ்ட்ரைக்கர்ஸ் - சிட்னி தண்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான பிக் பாஷ் டி20 லீக் போட்டி பாதியிலேயே கைவிடப்பட்டது.

big bash
big bash
author img

By

Published : Dec 21, 2019, 6:14 PM IST

மழை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் பாதியிலேயே கைவிடப்பட்டதை நாம் அறிந்திருப்போம். ஆனால், ஆஸ்திரேலியாவில் வழக்கத்திற்கு மாறாக காற்று மாசு, பனிப்புகை காரணமாக பிக் பாஷ் டி20 போட்டி ஒன்று பாதியிலேயே கைவிடப்பட்டது. நடப்பு சீசனுக்கான பிக் பாஷ் டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், அந்நாட்டு தலைநகர் கான்பராவில் அடிலெயிட் ஸ்ட்ரைக்கர்ஸ் - சிட்னி தண்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி இன்று நடைபெற்றது.

அதேசமயம் ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதிகளான கான்பரா, சிட்னி உள்ளிட்ட நகரங்களில் காட்டுத்தீ வேகமாக பரவிவருகிறது. இதனால், வீரர்கள் ரசிகர்கள் ஆகியோரின் நலன் கருதி மைதானத்தில் காற்றின் தரம் (Air Quality Index) கணக்கிடப்பட்டு திட்டமிட்ட நேரத்திற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே போட்டி தொடங்கியது.

டாஸ் வென்ற சிட்னி தண்டர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அடிலெயிட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. ஜொனதன் வேல்ஸ் 55, அலெக்ஸ் கெரி 45 ரன்கள் அடித்தனர். சிட்னி அணி தரப்பில் டேனியல் சாம்ஸ், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, 162 ரன்கள் இலக்குடன் சேஸிங்கைத் தொடங்கிய சிட்னி தண்டர்ஸ் அணி 4.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்தது. அப்போது காற்று மாசால் மைதானத்தில் நிலவிய பனிப்புகை காரணமாக ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. சிட்னி அணியின் தொடக்க வீரர் உஸ்மான் காவாஜா டக் அவுட்டான நிலையில், அலெக்ஸ் ஹெல்ஸ் 11 ரன்களுடனும், ஃபெர்குசன் 27 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, பனிப்புகையின் அளவு வழக்கத்தை விட ஆறு மடங்கு அதிகமாக இருந்ததால் இப்போட்டி பாதியிலேயே கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

  • Tonight’s match has been abandoned.

    We’re thinking of all the heroes fighting the bushfires at the moment and all the communities affected 💚 #ThunderNation

    — Sydney Thunder (@ThunderBBL) December 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக, நியூசிலாந்து - விக்டேரரியா லெவன் அணிகளுக்கு இடையே மெல்போர்னில் நடைபெறவிருந்த இரண்டுநாள் பயிற்சிப் போட்டி கடும் வெப்பம் காரணமாக ரத்தானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வெய்யிலால் ரத்தான போட்டி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.