மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஆறாவது லீக் போட்டி பெர்த்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளது.
காய்ச்சல் காரணமாக இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இப்போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதனால், அவருக்கு பதிலாக ரிச்சா கோஷ் அணியில் சேர்க்க்கப்பட்டுள்ளார்.
-
The second game of the day is just under half an hour away. Who's excited?#INDvBAN | #T20WorldCup pic.twitter.com/0WD6iuJXPT
— T20 World Cup (@T20WorldCup) February 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The second game of the day is just under half an hour away. Who's excited?#INDvBAN | #T20WorldCup pic.twitter.com/0WD6iuJXPT
— T20 World Cup (@T20WorldCup) February 24, 2020The second game of the day is just under half an hour away. Who's excited?#INDvBAN | #T20WorldCup pic.twitter.com/0WD6iuJXPT
— T20 World Cup (@T20WorldCup) February 24, 2020
இந்தத் தொடரில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடனான முதல் போட்டியில் 132 ரன்கள் அடித்திருந்தாலும், பூனம் யாதவ், ஷீகா பாண்டே ஆகியோரது சிறப்பான பந்துவீச்சினால் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இவ்விரு அணிகள் இதுவரை ஐந்து முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், இந்திய அணி மூன்று முறையும், வங்கதேச அணி இரண்டு முறையும் வென்றுள்ளது.
இறுதியாக, 2018 ஆசிய கோப்பை டி20 தொடரின் இறுதி போட்டியில் வங்கதேச அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. இதனால், இன்றைய ஆட்டத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அதற்கு பதிலடி தருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய அணி: ஹர்மன் ப்ரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ், ஷஃபாலி வர்மா, ஜெமிமா ராட்ரிகஸ், தீப்தி ஷர்மா, வேதா கிருஷ்ணமூர்த்தி, ஷீகா பாண்டே, தனியா பாட்டியா, அருந்ததி ரெட்டி, பூனம் யாதவ், ராஜேஸ்வரி ஜெயக்வாத்
வங்கதேச அணி: சல்மா கதுன் (கேப்டன்), ஷமிமா சுல்தானா, சஞ்ஜிதா இஸ்லாம், நிகார் சுல்தானா, ருமானா அகமது, ஃபர்கானா, ஜஹநரா அலாம், நஹிதா அக்தர், பன்னா கோஷ், ஃபஹிமா கதுன்,
இதையும் படிங்க: அதிரடி சச்சின், கலக்கல் கபில்தேவ் - மொடீரா உருவாக்கமும் வரலாறும்