வங்கதேச அணி நவம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டி வரும் நவம்பர் ஒன்றாம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.
ஆனால் கடந்த பத்து நாளுக்கும் மேலாக வங்கதேச கிரிக்கெட் அணியில் குழப்பமான சூழல் நீடித்துவருகிறது. முன்னதாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் சில கோரிக்கைகளை முன்வைத்து அந்நாட்டு வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்தப் பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
எனினும் வங்கதேச ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹாசன் அந்நாட்டு கிரிக்கெட் விதியை மீறி டெலிகாம் நிறுவனத்தின் விளம்பரத்தூதராக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டது.
இதனிடையே மற்றொரு பிரச்னையாக விதியை மீறியதாகக் கூறி அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டது. இந்த சூழலில் இந்திய அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தடை விதிக்கப்பட்டதால் ஷகிப்புக்கு பதிலாக டி20 கேப்டனாக மஹ்மதுல்லாவும், டெஸ்ட் அணியின் கேப்டனாக மோமினுல் ஹக்கும் செயல்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி20 அணி: மஹ்மதுல்லா (கேப்டன்), லிட்டன் தாஸ், சவுமியா சர்க்கார், நயிம் ஷேக், முஷ்பிகுர் ரஹிம், மிதுன், அபிஃப் ஹுசைன், முசாடென் ஹுசைன், அமினுல் இஸ்லாம், அராபத் சன்னி, தைஜுல் இஸ்லாம், முஸ்டபிஷுர் ரஹ்மான், ஷபியுல் இஸ்லாம், அபு ஹிதெர் ரோனி, அல் அமின் ஹுசைன்
டெஸ்ட் அணி: மோமினுல் ஹக் (கேப்டன்), ஷத்மான் இஸ்லாம், இம்ருல கேயஸ், சைப் ஹாசன், லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிம், மஹ்மது உல்லாஹ், முசாடெக் ஹுசைன், மெஹிடி ஹாசன், தஜில் இஸ்லாம், நயீம் ஹாசன், முஸ்டபிஷுர் ரஹ்மான், அல் அமின் ஹுசைன், அபு ஜெயத், எத்பாதத் ஹுசைன்