ETV Bharat / sports

முன்னாள் கேப்டன் கோரிக்கையை நிராகரித்த வங்கதேச கிரிக்கெட் வாரியம்...!

டாக்கா: மிர்பூர் மைதானத்தில் வங்கதேச அணி வீரர்களை பயிற்சிக்கு அனுமதிக்க வேண்டும் என வங்கதேச முன்னாள் கேப்டன் முஷ்ஃபிகுர் ரஹீம் வைத்த கோரிக்கையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளது.

bangladesh-cricket-board-rejects-mushfiqur-rahims-request-to-train-at-sher-e-bangla-citing-covid-19-threat

author img

By

Published : Jun 4, 2020, 7:15 PM IST

கரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் மார்ச் மாதம் முதல் நடத்தப்படவில்லை. இதனால் அனைத்து கிரிக்கெட் தொடர்களும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் இங்கிலாந்து உள்ளிட்ட சில கிரிக்கெட் வாரியங்கள் வீரர்களை பயிற்சிக்கு அனுமதித்துள்ளது.

இதனால் வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் முஷ்ஃபிகுர் ரஷீம், வங்கதேச கிரிக்கெட் வீரர்களை மிர்பூரின் ஷேர் ஈ பங்களா மைதானத்தில் பயிற்சி செய்ய அனுமதிக்க வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்திருந்தார்.

இதற்கு பதிலளித்த வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் நிஷாமுதீன் சவுத்ரி, ''இப்போதைய சூழலில் பயிற்சியை தொடங்குவதற்கான திட்டமில்லை. பயிற்சி முக்கியம் தான். ஆனால் அதனைவிட வீரர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். பல்வேறு மைதானங்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் வேலைகள் நடந்து வருகிறது. அது இன்னும் முடிவடையவில்லை. அனைத்து சூழல்களையும் கருத்தில் கொண்டே பயிற்சிகள் குறித்த முடிவுகளை எடுக்க முடியும். எதற்கும் அவசரம் காட்டக் கூடாது. ஐசிசி என்ன வகையான திட்டம் வைத்துள்ளது என்பது தெரிய வந்த பின்னரே மற்ற முடிவுகள் எடுக்கப்படும்'' என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.