ETV Bharat / sports

விராட் கோலி, தமன்னாவை கைது செய்ய கோரி வழக்கு! - ஆன்லைன் சூதாட்டம்

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும், அது தொடர்பான விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவிடக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

tamannah
tamannah
author img

By

Published : Jul 31, 2020, 2:21 PM IST

இது தொடர்பாக, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “ஆன்லைன் சூதாட்டங்கள் சமூகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் பொழுதுபோக்குக்காக அதற்குள் செல்லும் இளைஞர்கள், அதற்கு அடிமையாகிவிடும் சூழல் ஏற்படுகிறது.

கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா போன்ற பிரபலங்களை வைத்து விளம்பரங்கள் மூலம் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்காக, வட்டிக்கு பணம் வாங்கிய பின்னர், அதை கட்டமுடியாத சூழல் ஏற்படும்போது, இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

’ப்ளூவேல்’ விளையாட்டால் மாணவர்கள் தற்கொலைக்கு தூண்டப்பட்டதையடுத்து, உயர் நீதிமன்றம் அதற்கு தடை விதித்தது. ஆன்லைன் சூதாட்டங்கள் ப்ளூவேல் விளையாட்டை விட வீரியமானது என்பதால், நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு அதற்கு தடை விதிக்கவும், ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை முடக்கவும் வேண்டும்.

அத்தகைய இணையதளங்களை நிர்வகித்து வருபவர்களை கைது செய்வதோடு, அந்நிறுவனங்களுக்காக விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும்” எனக் கோரி, இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் வழக்கறிஞர் சூரியபிரகாசம் முறையீடு செய்தார்.

இதையடுத்து, ஆகஸ்ட் 4 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சீமான் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.