ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனையான மேகன் ஸ்கட் பந்துவீச்சாளர்களுக்கான டி20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக51 ஒருநாள், 47 டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய இவர் இதுவரை 132 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில், இவர் தனது நீண்ட நாள்காதலியும்,ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனையுமான ஜெஸ் ஹோல்யோக்கைநேற்று திருமணம் செய்து கொண்டார். இந்த நாள் தனது வாழ்க்கையில் மறக்க முடியாதசிறந்த நாள் என மேகன் ஸ்கட் தனது ட்விட்டர் பக்கத்தில் திருமணம் குறித்துபதிவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வது தொடர்பான தீர்மானம் 2018ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.