ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் (பாக்ஸிங் டே) போட்டி இன்று மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஏற்கெனவே இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்ததால், இப்போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.
-
Australia have won the toss and opted to bat first in the Boxing Day Test at MCG. #AUSvIND pic.twitter.com/vNykQz71G0
— BCCI (@BCCI) December 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Australia have won the toss and opted to bat first in the Boxing Day Test at MCG. #AUSvIND pic.twitter.com/vNykQz71G0
— BCCI (@BCCI) December 25, 2020Australia have won the toss and opted to bat first in the Boxing Day Test at MCG. #AUSvIND pic.twitter.com/vNykQz71G0
— BCCI (@BCCI) December 25, 2020
இதனால் இந்த டெஸ்ட் போட்டியில் நான்கு மிகப்பெரும் மாற்றங்களுடன் இந்திய அணி களம்கண்டுவருகிறது. இதில் சுப்மன் கில், சிராஜ் ஆகியோர் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியுள்ளனர். மேலும் நட்சத்திர வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த் ஆகியோருக்கும் இப்போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
-
He battled personal tragedy, fought adversity and is now rewarded with India's Test 🧢 no. 298. Congratulations Mohammed Siraj. Go seize the day! #TeamIndia #AUSvIND pic.twitter.com/D48TUJ4txp
— BCCI (@BCCI) December 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">He battled personal tragedy, fought adversity and is now rewarded with India's Test 🧢 no. 298. Congratulations Mohammed Siraj. Go seize the day! #TeamIndia #AUSvIND pic.twitter.com/D48TUJ4txp
— BCCI (@BCCI) December 25, 2020He battled personal tragedy, fought adversity and is now rewarded with India's Test 🧢 no. 298. Congratulations Mohammed Siraj. Go seize the day! #TeamIndia #AUSvIND pic.twitter.com/D48TUJ4txp
— BCCI (@BCCI) December 25, 2020
தொடக்கத்தில் சறுக்கல்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடக்கும் 100ஆவது டெஸ்ட் போட்டியாகவும் இது அமைந்துள்ளது. இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிவுள்ள ஆஸ்திரேலிய அணியில் ஜோ பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் பும்ராவின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் மேத்யூ வேட்டுடன் இணைந்த மார்னஸ் லபுசாக்னே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த மேத்யூ வேட் 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய இரண்டாவது ஓவரிலேயே ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்குச் சென்றார்.
-
Edge and taken! Australia 1⃣ down! @Jaspritbumrah93 strikes in his third over as Australia lose Joe Burns. #TeamIndia #AUSvIND
— BCCI (@BCCI) December 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Follow the match 👉 https://t.co/lyjpjyeMX5 pic.twitter.com/sPRWiUGnif
">Edge and taken! Australia 1⃣ down! @Jaspritbumrah93 strikes in his third over as Australia lose Joe Burns. #TeamIndia #AUSvIND
— BCCI (@BCCI) December 26, 2020
Follow the match 👉 https://t.co/lyjpjyeMX5 pic.twitter.com/sPRWiUGnifEdge and taken! Australia 1⃣ down! @Jaspritbumrah93 strikes in his third over as Australia lose Joe Burns. #TeamIndia #AUSvIND
— BCCI (@BCCI) December 26, 2020
Follow the match 👉 https://t.co/lyjpjyeMX5 pic.twitter.com/sPRWiUGnif
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்களை எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் லபுசாக்னே 5 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி தரப்பில் பும்ரா, அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.
அணி விவரம்:
இந்தியா : மயாங்க் அகர்வால், சுப்மன் கில், புஜாரா, ரஹானே (கே), ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.
ஆஸ்திரேலிய அணி: ஜோ பர்ன்ஸ், மேத்யூ வேட், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், டிம் பெய்ன் (கே), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹசில்வுட்.
இதையும் படிங்க:அடிலெய்டு தோல்விக்கு பாடம் புகட்டும் முனைப்பில் இந்தியா!